Bank Holiday : செப்டம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!

September 2025 Bank Holidays List | ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் 2025, செப்டம்பர் மாதத்திலும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செப்டம்பரில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து பார்க்கலாம்.

Bank Holiday : செப்டம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

30 Aug 2025 10:45 AM

அரசு விடுமுறை, உள்ளூர் விடுமுறை மற்றும் பண்டிகைகளின் போது வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் உள்ள நிகழ்வுகளை கணக்கிட்டு அதன்படி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் 2025, செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, வங்கிகள் செயல்படாத அந்த நாட்களில் வங்கி சேவைகளை (Bank Services) பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025, செப்டம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

  • செப்டம்பர் 03, 2025 (புதன்) – கர்மா பூஜை காரணமாக ராஞ்சியில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 04, 2025 (வியழன்) – ஓணம் பண்டிகை காரணமாக அன்றைய தினம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 05, 2025 (வெள்ளி) – மிலாடி நபி என்பதால் அன்றைய தினம் அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், விஜயவாடா ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 06, 2025 (சனிக்கிழமை) – மிலாடி நபி காரணமாக கேங்க்டாக், ஜம்மு மற்றும் காஷ்மீர், ராய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 07, 2025 (ஞாயிற்றுகிழமை) – ஞாயிற்று கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை.
  • செப்டம்பர் 12, 2025 (வெள்ளி) – மிலாடி நபி காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 13, 2025 (சனிக்கிழமை) – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை.
  • செப்டம்பர் 14, 2025 (ஞாயிற்றுகிழமை) – ஞாயிற்று கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை.
  • செப்டம்பர் 21, 2025 (ஞாயிற்றுகிழமை) – ஞாயிற்று கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை.
  • செப்டம்பர் 22, 2025 (திங்கள்கிழமை) – ஜெய்ப்பூரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 23, 2025 (செவ்வாய்கிழமை) – மகாராஜா ஹரி சிங் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 27, 2025 (சனிக்கிழமை) – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை.
  • செப்டம்பர் 28, 2025 (ஞாயிற்றுகிழமை) – ஞாயிற்று கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை.
  • செப்டம்பர் 29, 2025 (திங்கள்கிழமை) – துர்கா பூஜை என்பதால் அன்றைய தினம் அகர்தலா, கேங்க்டாக் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 30, 2025 (செவ்வாய்கிழமை) – துர்கா பூஜை என்பதால் அன்றைய தினம் அகர்தலா, புவனேஷ்வர், இம்பால், ஜெய்ப்பூர், கவுகாத்தி, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

இதையும் படிங்க : ஏடிஎம் பண பரிவர்த்தனை.. கூடுதல் கட்டணங்களை தவிர்ப்பது எப்படி?.. ஆர்பிஐ கூறும் முக்கிய விதிகள்!

வங்கி விடுமுறையின்போது என்ன செய்ய வேண்டும்?

வங்கிகள் எந்த எந்த நாட்கள் செயல்படாது என்பது குறித்த பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும் நிலையில், அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இதுதவிர அவசர வங்கி சேவைகளை பெற ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள், ஆன்லைன் பேங்கிங் (Online Banking), வங்கிகளின் மொபைல் செயலிகள் (Bank Mobile Apps) ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.