Year Ender 2025: இந்தியர்கள் அதிகமாக பயணம் செய்த டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!

Indian tourists visit: 2025 ஆம் ஆண்டு இந்தியர்களின் வெளிநாட்டு பயண போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பாரம்பரியமாக விரும்பப்படும் நாடுகள் தங்களின் முன்னணியைத் தக்க வைத்துக்கொண்டாலும், புதிய அனுபவங்களைத் தேடும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குறைவாக அறியப்பட்ட நாடுகளையும் அதிகமாக தேர்வு செய்துள்ளனர்.

Year Ender 2025: இந்தியர்கள் அதிகமாக பயணம் செய்த டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!

இந்தியர்கள் அதிகமாக பயணம் செய்த நாடுகள்

Published: 

15 Dec 2025 15:26 PM

 IST

2025 ஆம் ஆண்டு, இந்தியர்கள் வெளிநாடு பயணங்களில் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த ஆண்டின் பயணத் தேடல் தரவுகள் மற்றும் பயண போக்குகளை ஆய்வு செய்தப் பொது, இந்தியர்களுக்கான பிரபலமான சுற்றுலா இலக்குகள் எவை என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பாரம்பரிய சுற்றுலாத் தலங்களைத் தாண்டி, வழக்கத்திற்கு மாறான இடங்களை இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் தேடி வருகின்றனர். குறிப்பாக, தென் கொரியா, ஜார்ஜியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் 2025-ஆம் ஆண்டில் இந்தியப் பயணிகளின் வருகை, அதிகரித்து காணப்படுகிறது. எனினும், ஒட்டுமொத்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில், ஏற்கனவே பிரபலமான சுற்றுலாத் தலங்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம்:

அதன்படி, இந்திய பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) தான் அதிகமாக தேடி வருகின்றனர். Booking.com உள்ளிட்ட தேடல் தரவுகளின் படி, 2025இல் இந்தியர்கள் தேடும் மிக முக்கிய வெளிநாட்டு சுற்றுலா தளமாக UAE உள்ளது. ஓய்வுப் பயணம், புலம்பெயர்ந்த உறவினர்களைச் சந்தித்தல் மற்றும் வணிகப் பயணம் ஆகியவற்றின் காரணமாக அதிக எண்ணிக்கையிலான இந்தியப் பயணிகளை அந்நாடு ஈர்த்துள்ளது.

சவூதி அரேபியா:

இந்தியர்கள் விரும்பும் வெளிநாட்டு பயணங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை சவூதி அரேபியா பெற்றுள்ளது. சுற்றுலா, குடும்பத்தினரை சந்திக்கும் பயணங்கள், வணிக நோக்கங்கள் மற்றும் ஹஜ்-உம்ரா போன்ற ஆன்மீக யாத்திரைகள் காரணமாக சவூதி அரேபியாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசுத் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 34 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டிற்குப் பயணம் செய்துள்ளனர்.

அமெரிக்கா:

இந்தியர்களுக்கு விருப்பமான இடங்களின் பட்டியலில் அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஓய்வு, கல்வி மற்றும் குடும்ப உறவுகளால் உந்தப்பட்டு, அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை சீராக இருந்து வருகிறது. தரவுகளின்படி, அமெரிக்கா 21 லட்சம் இந்தியப் பயணிகளை ஈர்த்துள்ளது.

தாய்லாந்து:

தாய்லாந்து, அதன் பௌத்த பாரம்பரியம் மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களுடன், இந்தியர்களுக்கு ஒரு பிரபலமான ஓய்வு மற்றும் ஆன்மீகத் தலமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. தாய்லாந்துக்கு கிட்டத்தட்ட 1.91 மில்லியன் இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

சிங்கப்பூர்:

சிறந்த விமான இணைப்புகள், பாதுகாப்பான சூழல் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற சுற்றுலா அம்சங்கள் காரணமாக சிங்கப்பூர் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை ஈர்த்துள்ளது.

இங்கிலாந்து:

சுற்றுலா, வணிகம் மற்றும் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் காரணமாக இங்கிலாந்து இந்திய பயணிகளுக்கான முக்கிய இலக்காக தொடர்ந்து உள்ளது.

கத்தார்:

வணிகப் பயணங்கள், குடும்பச் சந்திப்புகள் மற்றும் இடைநிறுத்த (stopover) சுற்றுலா தளமாக விளங்குவதன் காரணமாக கத்தார் இந்தியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தோஹா வழியாக உள்ள உலகளாவிய விமான இணைப்புகள் மற்றும் எளிதான நுழைவு விதிமுறைகளும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

கனடா:

விடுமுறை சுற்றுலாவுக்கு ஏற்ற நாடாகவும் மற்றும் குடும்ப உறவுகளை சந்திக்கும் இடமாகவும் இருப்பதன் காரணமாக கனடா இந்தியர்களின் விருப்ப நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

ஓமன்:

கலாச்சார அனுபவங்கள், இயற்கை அழகு மற்றும் குறுகிய தூரப் பயணம் ஆகிய காரணங்களால் ஓமன் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. தளர்வான விசா விதிமுறைகளும், இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதும் இதற்கு காரணமாகக உள்ளன.

மலேசியா:

மலிவு விலை பயணம், எளிய நுழைவு நடைமுறைகள், பல்வேறு சுற்றுலா அம்சங்கள் மற்றும் சிறந்த விமான இணைப்புகள் காரணமாக மலேசியா இந்தியர்களுக்கான முக்கிய சுற்றுலா தலமாகத் தொடர்கிறது. குறிப்பாக குடும்ப மற்றும் விடுமுறை நாள் பயணங்களுக்கு இது அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்