தொங்கு பாலம் வெயிட் தாங்குமா? 96 கனரக லாரிகளை ஓட்டி சோதனை.. மாஸ் செய்த சீனா!

Huajiang Grand Canyon Bridge | சீனாவில் மிக உயரமான பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் உலகின் மிக உயரமான பாலமாக உள்ளது. ஆகஸ்ட் 21, 2025 முதல் ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பாலம் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொங்கு பாலம் வெயிட் தாங்குமா?  96 கனரக லாரிகளை ஓட்டி சோதனை.. மாஸ் செய்த சீனா!

பால சோதனை

Updated On: 

27 Aug 2025 20:06 PM

சீனா, ஆகஸ்ட் 27 : சீனாவில் (China) உள்ள மிக உயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான ஹூஜியாங் கிரண்ட் கேன்யன் (Huajiang Grand Canyon) பாலம் பாதுகாப்பு சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இந்த பாலம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில், 5 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மாபெரும் பொறியியல் சாதனையாக கருதப்படும் இந்த பிரம்மாண்ட பாலம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது உறுதியாகியுள்ளது.

சீனாவில் விரைவில் திறக்கப்பட உள்ள பிரம்மாண்ட பாலம்

சீனாவில் உள்ள குய்சோ மாகாணத்தில் உள்ள கார்ஸ்ட் மலைகளில் இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் மொத்தம் 2,900 மீட்டர் நீளம், 1,420 மீட்டர் அகலம் மற்றும் சுமார் 625 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அசாத்தியமான அளவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், இது இதுவரை இல்லாத மாபெரும் பொறியியல் சாதனையாக கருதப்படுகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டாலும், பல தடைகளுக்கு பிறகு பாலம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அதன் திட்ட மேலாளர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண் மருத்துவர்களை வீடியோ எடுத்த மருத்துவர்!

5 நாட்கள் சோதனையில் வெற்றி

இந்த பாலம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் நிலையில், அதனால் ஆபத்துக்களும் ஏற்படலாம் என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில், பாலத்தை திறப்பதற்கு முன்னதாக அதன் தரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 21, 2025 முதல் ஆகஸ்ட் 25, 2025 வரை லோடு சோதனை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 3,360 மெட்ரிக் டன் எடை கொண்ட 96 கனரக லாரிகள் பாலத்தின் சுமை தாங்கும் திறனை மதிப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாலத்தில் ஏற்படும் சிறிதளவு மாற்றங்கள் கூட கண்காணிக்கப்பட்டது. பாலத்தின் வலிமை, பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த பாலம் தற்போது திறக்கப்படுவதற்காக தயாராக உள்ளது.

இதையும் படிங்க : சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்.. 5 பேர் பலி!

இந்த பாலம் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த பாலம் உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.