உலகின் மிக உயரமான துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடம்…யாருக்கு சொந்தமானது!
Dubai Tallest Building Burj Khalifa: உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டடம் மிகவும் பிரபலமானதாகும். இந்தக் கட்டடத்தின் உரிமையாளர் யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த கட்டடம் தொடர்பான முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

துபாயின் மிக உயரமான கட்டடம்
துபாயில் புர்ஜ் கலிஃபா என்ற உலகின் மிக உயரமான கட்டிடம் அமைந்துள்ளது. 828 மீட்டருக்கும் அதிக உயரமான இந்த கட்டடம் ஆடம்பரம் மற்றும் லட்சியம், நவீன பொறியியல் கலையை அடையாளப்படுத்துகிறது. இந்த கட்டடம் தொடர்பாக பல ஆண்டுகளாக மூச்சடைக்கக் கூடிய காட்சிகள், ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சாதனை படைக்கும் கட்டுமானம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புர்ஜ் கலீஃபா கட்டடம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது. இந்த கட்டடமானது துபாயின் அரச குடும்பம் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆட்சியாளருக்கு சொந்தமானது என்று பலர் கூறுகின்றனர். இருப்பினும், இதற்கான உண்மை சற்று வித்தியாசமாகவும், ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் உள்ளது. இந்த கட்டடமானது எமார் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும்.
6 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணி
இந்த கட்டடத்துக்கான கட்டுமான பணி கடத்த 2004- ஆம் ஆண்டு தொடங்கி 2010- இல் நிறைவடைந்தது. இந்த கட்டடத்திற்கான திட்டமிடல் மற்று பொறியியல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு 6 ஆண்டுகள் ஆனது. எமார் பிராபர்ட்டீஸின் பின்னணியில் உள்ளவரும், புர்ஜ் கலிஃபாவின் உரிமையாளராக அங்கீகரிக்கப்பட்ட முகமது அலப்பார், ஒரு எமிராட்டி தொழிலதிபரும் ரியல் எஸ்டேட் அதிபருமானவர்.
மேலும் படிக்க: வங்காளதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்து இளைஞர்.. நீதி கேட்டு டெல்லியில் வெடித்த போராட்டம்.. பரபரப்பு!
ஒட்டு மொத்த வளர்ச்சி-தொலை நோக்கு பார்வை
இந்த கட்டிடத்தில் பல தனிப்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக அலகுகளின் உரிமையாளர்கள் இருந்தாலும், ஒட்டு மொத்த வளர்ச்சி மற்றும் தொலை நோக்குப் பார்வை அலப்பார் மற்றும் அவரது நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். எமார் பிராபர்ட்டீஸ் உருவாக்கத்தில் தி துபாய் மால், எமார் துபாய் நீரூற்று ஆகியவை அடங்கும். முகமது அலப்பாரின் செல்வாக்கு ரியல் எஸ்டேட்டுக்கு அப்பாற்பட்டதாகும்.
உலகளாவிய சுற்றுலா மையமாக
பல ஆண்டுகளாக, துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுடன் அவர் நெருங்கிய தொழில் முறை உறவை வளர்த்து கொண்டார். பின்னர் அலப்பார் ஷேக் முகமதுவின் முக்கிய பொருளாதார ஆலோசகர்களில் ஒருவரானார். மேலும், துபாயை உலகளாவிய சுற்றுலா மற்றும் வணிக மையமாக மாற்றும் முயற்சிகளில் அவருடன் நெருக்கமாக பணியாற்றினார்.
நகர்ப்புர வாழ்க்கைக்கான இடம் துபாய்
மூலோபாய திட்டமிடல் மற்றும் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் மூலம் அலப்பார் துபாயின் உலகளாவிய பிம்பத்தை வலுப்படுத்தவும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கவும் பங்களித்தார். ஆடம்பரம், புதுமை மற்றும் நவீன நகர்புற வாழ்க்கைக்கான இடமாக துபாயை நிலை நிறுத்துவதில் அவரது முயற்சிகள் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தன.
மேலும் படிக்க: துருக்கியில் நடந்த விமான விபத்து.. லிபிய ராணுவத் தளபதி உட்பட 8 பேர் பலி.. என்ன நடந்தது?