அத்துமீறிய பாகிஸ்தான்… இந்தியாவிடன் போன் போட்டு பேசிய சீனா.. என்ன மேட்டர்?
India pakistan Conflict : இந்திய பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையில், சீன வெளிவிவாகர அமைச்சர் வாங் யீ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, போர் இந்தியாவின் விருப்பம் அல்ல என்று அஜித் தோவல் தெளிவுப்படுத்தினார்.

சீன வெளிவிவாகர அமைச்சர் வாங் யீ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, இந்திய பாகிஸ்தான் குறித்து அஜித் தோவல் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூரை மத்திய அரசு கையில் எடுத்தது. அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்தியாவிடன் போன் போட்டு பேசிய சீனா
இந்த தாக்குதல் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானும் ட்ரோன்களை தாக்கியது. இப்படி மாறி மாறி இருநாடுகளும் தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த மூன்று நாட்களாக இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வந்தது.
இந்த விஷயத்தில் அமெரிக்கா தீவிரமாக தலையீட்டு, இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு உதவி செய்தது. இதனை அடுத்து, 2025 மே 10ஆம் தேதி மாலை 5 மணி முதல் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இருநாடுகளுக்கு போர் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு காஷ்மீர் ட்ரோன்கள் வந்தன. இதனை இந்தியா அழித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையில் தான், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவலுடன் தொலைபேசியில் பேசினார்.
என்ன மேட்டர்?
Chinese Foreign Minister Wang Yi had a phone conversation with Indian National Security Advisor Doval
As per Chinese Foreign Ministry, “Doval said that the Pahalgam terrorist attack caused serious casualties among Indian personnel and that India needed to take counter-terrorism… pic.twitter.com/38ZyFkHrTN
— ANI (@ANI) May 10, 2025
பேச்சுவார்த்தையின்போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உறுதியுடன் இருக்கும் என்றும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்கும் என்றும் நம்புவதாகக் கூறினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சீனா கண்டிப்பதாகவும், பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்ப்பதாகவும் வாங் யி கூறினார்.
ஆசிய பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் வாங் யி கூறினார். இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்க முடியாத அண்டை நாடுகள் என்றும், அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகள் என்றும் கூறியிருக்கிறார். இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியையும் நிதானத்தையும் காக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறினார். பேச்சுவார்த்தையின்போது, அஜித் தோவல் கூறியதாவது, போர் இந்தியாவின் விருப்பம் அல்ல என்றும் எந்த தரப்பினருக்கு அதில் நன்மை இல்லை என்றும் அஜித் தோவல் கூறியிருக்கிறார்.