Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெய்யழகன் இயக்குநருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்தி மற்றும் சூர்யா

Actors Karthi and Suriya: தமிழ் சினிமாவில் ஒளிபதிவாளராக இருந்து பின்பு இயக்குநராக மாறியவர் பிரேம் குமார். இவரது இயக்கத்தில் தமிழில் இதுவரை வெளியான இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இவருக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளனர்.

மெய்யழகன் இயக்குநருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்தி மற்றும் சூர்யா
சூர்யா, கார்த்திImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 11 May 2025 10:58 AM

தமிழ் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் பசங்க. குழந்தைகளை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார் பிரேம் குமார் (Prem Kumar). அதனை தொடர்ந்து இவர், வர்ணம், சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, எய்தவன் மற்றும் ஒருபக்க கதை என தொடர்ந்து படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இதில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பகவதி பெருமாள், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ் என பலர் நடித்திருந்தனர்.

மேலும் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கிருஷ்ணனின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடிகர்கள் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி ஜி கிருஷ்ணன் ஆகியோர் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. பள்ளியில் ஏற்படும் காதல் காலம் கடந்தும் எப்படி பயணிக்கிறது என்பது குறித்து மிகவும் அழகாக காட்டியிருப்பார் இயக்குநர் பிரேம் குமார்.

இந்த 96 படம் பலரின் நாஸ்டாலஜியை தூண்டும் விதமாக இருந்தது என்று ரசிகர்கள் பாராட்டித்தள்ளினர். மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் 2020-ம் ஆண்டு ஜானு என்ற பெயரில் வெளியான இந்தப் படத்தையும் பிரேம் குமாரே இயக்கி இருந்தார்.

இந்த தெலுங்கு ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் நடிகர் ஷர்வந்த் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் கதாப்பாத்திரத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் தெலுங்கிலும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் தமிழில் இரண்டாவதாக இயக்கிய படம் மெய்யழகன். நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில் நடிகர்கள் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன் மற்றும் சரண் சக்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

படம் கடந்த 27-ம் தேதி செப்டப்மர் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு நல்ல ஃபீல் குட் படமாக வெளியான இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

குறிப்பாக நடிகர் கமல் ஹாசன் பாடியா போய் வா கலங்காதே பாடல் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது நிதர்சனமான உண்மை. இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் மட்டும் இன்றி ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இயக்குநர் பிரேம் குமார் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு:

இந்த நிலையில் தற்போது இயக்குநர் பிரேம் குமாருக்கு நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் இணைந்து ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அது என்ன என்றால், இயக்குநர் பிரேம் குமாரின் கனவு வாகனமான வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை அவருக்கு பரிசாக அளித்துள்ளனர். இதுகுறித்து பிரேம் குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

மேடையில் மயங்கி விழுந்த விஷால் - அவருக்கு என்ன ஆச்சு?
மேடையில் மயங்கி விழுந்த விஷால் - அவருக்கு என்ன ஆச்சு?...
கில்..? பண்ட்..? இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்..?
கில்..? பண்ட்..? இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்..?...
வெளிநாட்டுக்கு டூர் போகணுமா? விசா இல்லாமல் பயணிக்க கூடிய நாடுகள்
வெளிநாட்டுக்கு டூர் போகணுமா? விசா இல்லாமல் பயணிக்க கூடிய நாடுகள்...
இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!
இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!...
வன்னியர் இளைஞர் பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!
வன்னியர் இளைஞர் பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!...
மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் யானைகளின் வீடியோ!
மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் யானைகளின் வீடியோ!...
ஆபத்தான முறையில் ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்!
ஆபத்தான முறையில் ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்!...
கருணாநிதிக்கு மெரினாவில் ராமதாஸால் இடம் கிடைத்தது - பாமக பாலு
கருணாநிதிக்கு மெரினாவில் ராமதாஸால் இடம் கிடைத்தது - பாமக பாலு...
சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை... அதற்கான காரணம் இதுதான்- ஜோதிகா!
சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை... அதற்கான காரணம் இதுதான்- ஜோதிகா!...
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..வெற்றியாளர் விவரம்
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..வெற்றியாளர் விவரம்...
AI உதவியுடன் தனது பெயரைத் தேர்ந்தெடுத்த புதிய போப்
AI உதவியுடன் தனது பெயரைத் தேர்ந்தெடுத்த புதிய போப்...