Silambarasan TR: இரவு நேரத்துல இதை பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ்!
திருச்சியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அதிக உணவு உட்கொள்ளுதல் மற்றும் இரவு உணவுக்குப் பின்னர் உடனடியாக தூங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் சிலம்பரசன் டிஆர் (Silambarasan TR) மாணவர்களுக்கும், இளம் வயதினருக்கும் பிட்னெஸ் தொடர்பான டிப்ஸ் (Fitness Tips) ஒன்றை வழங்கி அசத்தியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு மாணவ, மாணவியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தன்னுடைய சினிமா வாழ்க்கை, தக் ஃலைப் படம் பற்றி பல தகவல்களை சிலம்பரசன் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர், பிட்னெஸ் விஷயத்தில் இளம் வயதினர் என்ன பின்பற்ற வேண்டும்?, அவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சிம்பு பதில் சொன்ன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிலம்பரசனின் அட்வைஸ்
#SilambarasanTR‘s Fitness Tip for students:
“You can eat anything in this age & enjoy the life happily😊♥️. But ofcourse there is limit. My tip is don’t eat heavily on Night & go for sleep immediately🍽️💤. Ear lightly & sleep with a little hunger🤝”pic.twitter.com/oaS7anRziu— AmuthaBharathi (@CinemaWithAB) May 11, 2025
அதாவது, “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த வயதில் நாம் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஜாலியா இருக்கலாம். உடலை கட்டுக்கோப்பாக வைக்க இன்னும் காலம் இருக்கிறது. இந்த வயதில் எதுவும் பிரச்னையில்லை என்பதற்காக இஷ்டத்துக்கு சாப்பிட்டு உடல்நலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அதன்பிறகு எதிர்காலத்தில் ரொம்ப கஷ்டப்படுவீர்கள். உடல் எடை அதிகரித்தாலோ, அல்லது உடல் நல பாதிப்பு வந்தாலோ அதை சரி செய்ய ரொம்ப சிரமப்படுவீர்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இரவு நேரத்தில் மிகவும் அதிகமாக சாப்பிட்டு விட்டு உடனே தூங்காதீங்க. அதை மட்டும் கொஞ்சம் தவிருங்கள். இரவு நேரத்தில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் பசியுடன் தூங்கினால் நன்றாக இருக்கும்” என சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
ஆளே மாறிப்போன சிம்பு
தமிழ் சினிமாவில் கைக்குழந்தையாக இருக்கும்போது அறிமுகமான சிம்புவுக்கு இன்று இளம் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முக திறமையாளரான சிலம்பரசனுக்கு நடுவில் சில காலம் சினிமாவில் இறக்கமாக இருந்தது. அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இதற்கிடையில் கொரானா காலக்கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதே உடலுடன் செக்க சிவந்த வானம் படத்தின் ஷூட்டிங்கில் கிண்டலுக்கு ஆளானார்.
தொடர்ந்து தீவிர முயற்சியால் உடல் எடை குறைந்து 42 வயதிலும் 25 வயது இளைஞன் போல செயல்பட்டு வருகிறார். அதேசமயம் ஆன்மிகம் போன்றவற்றில் அதிகம் நாட்டம் கொண்டவராகவும் மாறியுள்ளார். அடுத்ததாக சிலம்பரசன் டிஆர் நடிப்பில் தக் லைஃப் என்ற படம் 2025, ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.