அமிர்தசரஸில் நிலவும் பதற்றம்.. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை!
Amritsar on High Alert After Pakistan Violates Ceasefire | இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று ( மே 10, 2025) ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, அமிர்தசரஸில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமிர்தசரஸ், மே 11 : இந்தியா – பாகிஸ்தானுக்கு (India – Pakistan) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், அமிர்தசரஸில் இன்று ( மே 11, 2025) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ( மே 10, 2025) போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களிலேயே ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில், இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமிர்தசரஸ் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு என்ன என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அதற்கு காரணமான பாகிஸ்தான் தீவுரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், நேற்று (மே 10, 2025) இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
This is no ceasefire. The air defence units in the middle of Srinagar just opened up. pic.twitter.com/HjRh2V3iNW
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று ( மே 10, 2025) மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாலை 5 மணி முதல் தாக்குதல்களை நிறுத்துவதாக இரு நாடுகளும் அறிவித்தன. ஆனால், பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடுத்த ஒரு சில மணிகளிலேயே இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்தது.
அமிர்தசரஸில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய நிலையில், இன்று ( மே 11, 2025) முன்னெச்சரிக்கை பாகிஸ்தானில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, அமரிதசரஸில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் யாரும் சாலையில் நடமாடவோ, மாடியில் நிற்பதையோ தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அமிர்தசரஸில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டாலும் ரெட் அலர்ட் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.