Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

”இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியது நான்தான்” – அதிபர் டிரம்ப் அதிரடி..

India Pakistan Ceasefire: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், எனது அரசாங்கம் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வரலாற்று சிறப்புமிக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க செய்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

”இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியது நான்தான்”  – அதிபர் டிரம்ப் அதிரடி..
அதிபர் டிரம்ப்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 14 May 2025 12:09 PM

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற மோதலை நிறுத்தி போர் நிறுத்தம் அறிவிக்க வைத்தது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். தனது மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் போது ரியாத்தில் பேசிய அவர் இந்த மாத தொடக்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் அதிகரித்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வரலாறு சிறப்புமிக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க செய்தேன் என மீண்டும் ஒருமுறை அவர் பேசியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே நீடித்த போர் பதற்றம்:

ஏப்ரல் 22 ஆம் தேதி 2005 அன்று காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலின் போது 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டன.ர் இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்களோ ராணுவ இருப்பிடமோ குறிவைத்த தாக்கப்படவில்லை என இந்தியா தரப்பில் உலக நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தரப்பில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறி வைத்து பஞ்சாப் ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். ட்ரோன் மூலமும் ஏவுகணை மூலமும் பாகிஸ்தான் தாக்க முயற்சித்த போது இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அதனை சுட்டு வீழ்த்தியது.

போர் நிறுத்தம் அறிவிப்பு:

நாளுக்கு நாள் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் மே பத்தாம் தேதி டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் தல பக்கத்தில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரு நாடுகளும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் இது வரவேற்கத்தக்க விஷயம் எனவும் குறிப்பிட்டிருந்தார் இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டனர்.

டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?


இப்படி இருக்கும் சூழலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக ரியாத்தல் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “ சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் வன்முறையை தடுக்க எனது நிர்வாகம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. அதை செய்ய நான் வர்த்தகத்தை பயன்படுத்தினேன். இதில் நண்பர்களே வாருங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஆயுத வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உங்கள் நாட்டில் தயாரிக்கும் பொருட்களை வைத்து வர்த்தகம் செய்வோம். இருநாட்டு தலைவர்களும் மிகவும் சக்தி வாய்ந்த, வலுவான, நல்ல புத்திசாலி தலைவர்கள். எனவே உடனடியாக இந்த பேச்சு வார்த்தைக்கு அடுத்து சண்டையை நிறுத்தி விட்டார்கள். சிறியதாக தொடங்கிய போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருந்த நேரத்தில் அதில் பல லட்சம் கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கும் நிலை உருவாகி இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தத்தை அறிவித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என பேசியுள்ளார்

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை துணை செய்து தொடர்பாளர் டாமி பிகோட் செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப் பேசியதை அவரும் கூறியுள்ளார். அப்போது பேசிய அவர் ”இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் அமைதி பாதை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர்கள் மோடி மற்றும் ஷெரிப்பை பாராட்டுகிறோம். ஜனாதிபதி டிரம்ப் கூறியது போல் அவர்களின் முடிவு வலிமை ஞானம் மற்றும் மன உறுதியை பிரதிபலிக்கிறது. பிராந்திய ஸ்திரதன்மையை பாதுகாக்க இரு தரப்பினரும் நேரடி தொடர்பை பராமரிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டார்.

விஜய் ஆண்டனியின் 'ககன மார்கன்'படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
விஜய் ஆண்டனியின் 'ககன மார்கன்'படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி... சம்பளத்தை உயர்த்தினாரா சசிகுமார்?
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி... சம்பளத்தை உயர்த்தினாரா சசிகுமார்?...
தந்தையைக் கொன்று நாடகமாடிய மகன்- சிசிடிவியால் வெளிவந்த உண்மை
தந்தையைக் கொன்று நாடகமாடிய மகன்- சிசிடிவியால் வெளிவந்த உண்மை...
மாமன் பட ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!
மாமன் பட ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!...
38 மாதங்கள்! 1152 நாட்கள்! தொடர்ந்து நம்பர் 1.. ஜடேஜா புதிய சாதனை
38 மாதங்கள்! 1152 நாட்கள்! தொடர்ந்து நம்பர் 1.. ஜடேஜா புதிய சாதனை...
ட்ரோன்களை அழிக்க இராணுவத்தில் புதிதாக களமிறங்கும் ’பார்கவாஸ்த்ரா’
ட்ரோன்களை அழிக்க இராணுவத்தில் புதிதாக களமிறங்கும் ’பார்கவாஸ்த்ரா’...
எனது மகனுக்கு படங்களை இயக்கவேண்டும் என்று ஆசை - சந்தானம்
எனது மகனுக்கு படங்களை இயக்கவேண்டும் என்று ஆசை - சந்தானம்...
10 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவை மாற்றிய கூகுள் !
10 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவை மாற்றிய கூகுள் !...
பைக்கில் கிளட்ச் பிரச்னையா? - ஈஸியா கண்டுபிடிக்க இதோ டிப்ஸ்!
பைக்கில் கிளட்ச் பிரச்னையா? - ஈஸியா கண்டுபிடிக்க இதோ டிப்ஸ்!...
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு...
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு......
ரூ100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ்!
ரூ100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ்!...