Iran – Israel : ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு!

Iran-Israel War Conflict | ஜூன் 13, 2025 தொடங்கி ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மிக கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானின் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Iran - Israel : ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published: 

18 Jun 2025 08:56 AM

அமெரிக்கா, ஜூன் 18 : ஈரானின் (Iran) வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானின் பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்காவுடன் ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதல் (Iran – Israel Conflict) கடந்த 5 நாட்களுக்கும் மேல் நீடித்து வரும் நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஈரான் குறித்து டிரம்ப் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் கடும் மோதல்

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள் தங்களுக்கு ஆபத்தாக மாறலாம் என கருதிய இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. அதாவது ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல், ஜூன் 13 ,2025 அன்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் ட்ரூ பிராமிஸ் 3 (Operation True Promise 3) என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஈரான், பதில் தாக்குதல் தொடங்கியது.

இதன் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஜூன் 13, 2025 அன்று தொடங்கிய இந்த மோதல் தற்போது வரை நீடித்து வருவதால் இரு நாடுகளிலும் பதற்றம் நிலவுகிறது. அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இரு நாடுகளின் தலை நகரங்களில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு அரசு அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது – டிரம்ப்

இந்த நிலையில், ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் வான்வெளி முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம். இரானில் சிறந்த வான் சோதனை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றை அமெரிக்காவுடன் ஒப்பிட முடியாது. அமெரிக்காவை விட யாராலும் சிறப்பாக இருக்க முடியாது என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.