உலகுக்கு இந்தியா அளித்த பரிசு தமிழ் – மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம்
இரண்டு நாள் அரசுப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார். அப்போது உலகுக்கு இந்தியா அளித்த பரிசு தமிழ் என்று பேசினார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி
இரண்டு நாள் அரசுப் பயணமாக பிப்ரவரி 7, 2026 அன்று மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அங்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார். அப்போது உலகுக்கு இந்தியா அளித்த பரிசு தமிழ் என்று பேசினார். மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா மற்றும் மலேசியா இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் உணர்வுப்பூர்வ உறவுகள் குறித்து பேசினார். இந்திய கலாச்சாரம், மொழி மற்றும் பண்பாட்டை தலைமுறைகள் கடந்தும் பாதுகாத்து வருவதற்காக மலேசிய இந்தியர்களை அவர் பாராட்டினார்.
உலகுக்கு இந்தியா அளித்த பரிசு தமிழ்
இந்தியா மற்றும் மலேசியா இடையிலான உறவுகள் குறித்து பேசும் போது, உலகிலேயே இரண்டாவது அதிகமான இந்தியர்கள் வசிக்கும் நாடாக மலேசியா திகழ்கிறது. இந்தியர்களையும் மலேசியர்களையும் இணைக்கும் பல உறவுகள் உள்ளன. நீங்கள் இரு நாடுகளுக்கிடையேயான பாலமாக இருக்கிறீர்கள். தமிழ் இந்தியாவை உலகத்துடன் இணைக்கும் மொழி. தமிழ் இலக்கியம் என்றென்றும் நிலைத்திருப்பது, தமிழ் பண்பாடு உலக அளவில் எடுத்து செல்லும். மலேசியாவில் பெரும்பாலான மக்கள் தமிழை பேசுகின்றனர். மலேசிய அரசு தமிழை அலுவல் மொழியாக அங்கீகரித்துள்ளது.
இதையும் படிக்க : மத்திய பட்ஜெட்.. பாஜகவை கண்டித்து பிப்.12 திமுக, கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு!
மலேசியாவில் பேசிய பிரதமர் மோடி
#WATCH | Kuala Lumpur, Malaysia | Addressing the Indian diaspora, Prime Minister Narendra Modi says, “When we met in 2015, I spoke to you about India’s potential. Now, I speak to you about India’s performance in one decade… We were then the 11th-largest economy in the world.… pic.twitter.com/dxHEpMj1N1
— ANI (@ANI) February 7, 2026
இதையும் படிக்க : தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி…மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!
எம்ஜிஆர் பாடல்களை விரும்பி கேட்கும் மலேசிய பிரதமர்
மேலும் பேசிய அவர், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் நீண்ட நாள் நட்பு உள்ளது. விமான நிலையத்தில் நேரில் வந்து வரவேற்றதும், தனது காரிலேயே அழைத்து வந்ததும், இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் அவர் காட்டும் மரியாதையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் இசை மற்றும் திரைப்படங்கள் மலேசியாவில் பிரபலமாக இருக்கின்றன. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பழைய ஹிந்தி பாடல்களை பாடும் இந்தியாவில் வைரலாகின. மறைந்த நடிகரும் முதல்வருமான எம்ஜிஆரின் பாடல்களையும் அவர் விரும்பி கேட்கிறார்.