இலங்கையில் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழை.. விமானங்களை இந்தியாவுக்கு திருப்பிவிட முடிவு!
Srilanka Flights Diverting To India | இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் திர்த்து வருகிறது. இந்த நிலையில், மோசமான வானிலை மற்றும் விமான நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளது ஆகியவற்றின் காரணமாக இலங்கை விமானங்களை இந்தியாவுக்கு திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
கொழும்பு, நவம்பர் 28 : இலங்கையில் (Srilanka) கடந்த சில நாட்களாக மிக கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நவம்பர் 17, 2025 முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகிய இயற்கை அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றின் காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விமானங்களை இந்தியாவுக்கு திருப்பி விட முடிவு செய்துள்ள இலங்கை
இலங்கையில் மிக மோசமான வானிலை காரணமாக அந்த நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி அணுர கருணாதிலகே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இலங்கைக்கு வரக்கூடிய அனைத்து விமானங்களும் வானிலை அவசர நிலை காரணமாக பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் போனால், இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் அல்லது கொச்சி விமான நிலையங்களுக்கு அவை திருப்பி விடப்படும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : டைட்டானிக் கப்பல் விபத்தில் மீட்கப்பட்ட தங்க கடிகாரம்.. ரூ.20 கோடிக்கு ஏலம் போனது!
ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி
இலங்கையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் நீர் தேங்கி ரயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக பட்டிகலோவா மற்றும் திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொழும்பு மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுக் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் மிகுந்த சிறமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : டன் டன்னாக தங்கம்.. சத்தமில்லாமல் வாங்கும் சீனா?! எதிர்கால திட்டம் இதுதானா?
இலங்கை கடற் பகுதியில் உருவாகியுள்ள புதிய புயல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நவம்பர் 30, 2025 அன்று கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.