இஸ்ரேல் ஈரான் பதற்றம்.. அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா.. என்ன நடக்கிறது?

Israel Iran Conflict : இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 7 நாட்களாக போர் பதற்றம் நடந்து வருகிறது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழலில், அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் ஈரான் பதற்றம்.. அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா.. என்ன நடக்கிறது?

டிரம்ப் - புதின்

Updated On: 

19 Jun 2025 17:25 PM

ஈரான் – இஸ்ரேல் மோதல் (Israel Iran Conflict) குறித்து அமெரிக்காவை  (America) ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் (Russia) துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், இஸ்ரேலுக்கு நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு எதிராக அமெரிக்காவை எச்சரித்தார். இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், இதுபோன்ற எச்சரிக்கையை இஸ்ரேல் விடுத்துள்ளது. 2025 ஜூன் 15ஆம் தேதி முதல் இஸ்ரேல் ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் அணு ஆயுதங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் இஸ்ரேலில் மக்கள் வாழும் இடங்களிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியே இரு நாடுகளும் 7 நாட்களாக மாறி மாறி வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் அணு ஆயுத திட்டங்களை ஒழிக்கவே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இஸ்ரேல் ஈரான் பதற்றம்

மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தணிக்க உலக நாடுகள் முன்வந்துள்ளன. இந்த விஷயத்தில் அமெரிக்கா ஈரான் அணு ஆயுத திட்டத்தை எதிர்த்து வருகிறது. அண்மையில் கூட, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ஈரான் தலைவர் கமேனி சரணடைவதே ஒரே தீர்வு என கூறியிருந்தார்.

இதற்கு ஈரான் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. அதாவது, ஈரான் தலைவர் கமேனி பேசுகையில், “நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம். இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது. இதற்கு நிச்சயம் தண்டிக்கப்படும். அமெரிக்கா தலையிட்டால் சரி செய் முடியாத சேதத்தை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா


இப்படியான சூழலில், அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது.  ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், இஸ்ரேலுக்கு நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு எதிராக அமெரிக்காவை எச்சரித்தார்.  இதுகுறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறுகையில், “இதுபோன்ற ஊக, கற்பனையான விருப்பங்களுக்கு எதிராக நாங்கள் அமெரிக்காவை எச்சரிக்கிறோம். இந்த நடவடிக்கை சூழ்நிலைகளை தீவிரமாக சீர்குலைக்கும் ஒரு படியாக இருக்கும்” என்றார்

முன்னதாக, ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தொடர்ந்து உயிருடன் இருக்கவே முடியாது என்று இஸ்ரேல் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு இஸ்ரேல் பதில் கொடுத்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ”கோழைத்தனமான ஈரானிய சர்வாதிகாரி ஒரு பலப்படுத்தப்பட்ட பதுங்கு குழியின் ஆழத்தில் அமர்ந்து இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணைகளை வீசுகிறார்.

இவை மிகவும் கடுமையான வகையான போர்க்குற்றங்கள். காமேனி தனது குற்றங்களுக்கு பொறுப்பேற்கப்படுவார். இஸ்ரேலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நீக்கவும், அயதுல்லாவின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஈரானில் உள்ள மூலோபாய இலக்குகள் மற்றும் தெஹ்ரானில் உள்ள அரசாங்க இலக்குகள் மீதான தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிக்க பிரதமரும் நானும் அறிவுறுத்தியுள்ளோம். இனி அவர் உயிருடன் இருக்க முடியாது. மருத்துவமனை தாக்குதலுக்கு கமேனி பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், இஸ்ரேல் பிரதமர் ஈரானும், கடும் விலையை கொடுக்க நேரிடும் என ஈரானை எச்சரித்துள்ளார்.