டைட்டானிக் கப்பல் விபத்தில் மீட்கப்பட்ட தங்க கடிகாரம்.. ரூ.20 கோடிக்கு ஏலம் போனது!

Titanic Passenger's Gold Watch Sells for 20 Crore | டைக்கானிக் கப்பல் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்தவர்களின் உடமைகள் மீட்கப்பட்டு ஏலத்தில் விபடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டைட்டானிக் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க கடிகாரம் ஒன்று ரூ.20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பல் விபத்தில் மீட்கப்பட்ட தங்க கடிகாரம்.. ரூ.20 கோடிக்கு ஏலம் போனது!

ஏலத்திற்கு விடப்பட்ட வாட்ச்

Published: 

25 Nov 2025 08:35 AM

 IST

லண்டன், நவம்பர் 25 : 1912 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் (Titanic  Ship) தொடர்பான ஆய்வுகள் இன்றுவரை தொடந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து தொடர்பான புதிய புதிய தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டைட்டானிக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானபோது அதில் இருந்து எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ஒன்று தற்போது கோடி கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டைட்டானிக்கில் இருந்து எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல்

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டு சென்றது. அந்த கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றுக்கொண்டு இருந்தபோது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த சுமார் 1,500 பேர் பரிதாபமாக பலியாகினர். உலகையே உலுக்கிய, இன்றும் கூட பேசப்படும் ஒரு வரலாற்று விபத்தாக இந்த டைட்டானிக் கப்பல் விபத்து அறியப்படுகிறது.

இதையும் படிங்க : ஃபாசிஸ்ட் என கூறியது குறித்து கிண்டல் செய்த டிரம்ப்.. மம்தானி – டிரம்ப் சந்திப்பில் சிரிப்பலை

டைட்டானிக்கில் பயணித்த பயணியின் தங்க கடிகாரம் ஏலம்

டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது அதன் பாகங்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகள் மீட்கப்பட்ட அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்டாரஸ் என்ற பயணியின் 22 காரட் தங்க கடிகாரம் ஒன்று இங்கிலாந்தில் உள்ள வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மேடையில் தவறி விழுந்த ஜமைக்கா அழகி!

ரூ.35 கோடியை தாண்டி விற்பனை செய்யப்பட்ட டைட்டானிக் பொருட்கள்

ஏலத்திற்கு விடப்பட்ட அந்த கடிகாரம் ரூ.20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது இதுவரை டைட்டானிக்கில் இருந்து மீட்பக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவு ஏலம் போன பொருளாக உள்ளது. இதன் மூலம் இதுவரை ஏலம் விடப்பட்ட டைட்டானிக் பொருட்களின் தொகை ரூ.35 கோடியை தாண்டியுள்ளது என்று ஏல நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..