அணுசக்தி விவகாரத்தில் சமரசத்திற்கு தயார்.. ஆனால்.. அமெரிக்காவுக்கு நிபந்தனை வைத்த ஈரான்!

Iran Is Ready For Nuclear Deal With America | அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில், அணு ஆயுதம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் தெரிவித்துள்ளது.

அணுசக்தி விவகாரத்தில் சமரசத்திற்கு தயார்.. ஆனால்.. அமெரிக்காவுக்கு நிபந்தனை வைத்த ஈரான்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

16 Feb 2026 15:51 PM

 IST

ஜெனீவா, பிப்ரவரி 16 : ஈரான் (Iran) மற்றும் அமெரிக்கா (America) இடையே அணுசக்தி திட்டம் தொடர்பான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், ஈரான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சமரசத்திற்கு தயார் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,  அமெரிக்கா உடனான சமரசத்திற்கு தயார் என ஈரான் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் – அமெரிக்கா இடையே நீடித்து வந்த பதற்றம்

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் தான் ஈரான், அணு ஆயுதங்களை தயாரிப்பதை கைவிட வேண்டும் என்றும், அது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  (America President Donald Trump) தொடர்ந்து கூறி வருகிறார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதையும் படிங்க : வங்கதேச தேசியவாத கட்சி அபார வெற்றி.. தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஈரான்

இந்த நிலையில், தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கினால் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவாரத்தை நடத்தி சமரசம் செய்ய தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு உலக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான அணுசக்தி விவகாரம் தொடர்பான 2வது சுற்று பேச்சுவார்த்தை நாளை (பிப்ரவரி 17, 2026) ஜெனீவாவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஈரான் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க : சீனாவில் கலைக்கட்ட தொடங்கிய புத்தாண்டு.. பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ஜி ஜின்பிங்!

இந்த பேச்சுவார்த்தையின் மூலம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த சிக்கல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
அமெரிக்காவில் படித்து வந்த இந்திய இளைஞர் திடீர் மாயம்.. அதிர்ச்சி சம்பவம்!
ஏஐ சாட்பாட்களை டின்னர் டேட்டுக்கு அழைத்து வாருங்கள்.. நியூயார்க் உணவகம் அறிவிப்பு!
கிம் ஜாங் உன்னை தொடர்ந்து வடகொரியாவை ஆளப்போகும் அவரது மகள்?.. உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!
பிரதமர் மோடி குறித்து அதிபர் டிரம்ப் பேசிய வீடியோ.. உண்மை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்..
வங்கதேச தேசியவாத கட்சி அபார வெற்றி.. தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
சீனாவில் கலைக்கட்ட தொடங்கிய புத்தாண்டு.. பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ஜி ஜின்பிங்!
ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?