Greece : கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் அதிர்ச்சி!
Powerful 6.0 Magnitude Earthquake Hits Greece | கிரீஸில் கடந்த வாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்றும் (மே 22, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு கடலோர பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கிரீஸ் நிலநடுக்கம்
கிரீஸ், மே 22 : கிரீஸில் இன்று (மே 22, 2025) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சுனாமி எச்சரிக்கையும் (Tsunami Awareness) விடுகப்பட்டுள்ளது. அங்கு நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 6 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உரைந்துள்ளனர். இந்த நிலையில், கிரீஸில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிரீஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவு 6 ஆக பதிவு
கடந்த சில நாட்களாகவே உலகின் பல்வேறு பகுதிகளில் சந்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மே 22, 2025) காலை சரியாக 8.49 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதாவது, கிரீஸின் கிரீட் கடலோர பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
CCTV footage of 6.1 Earthquake in Heraklion, Crete, Greece pic.twitter.com/1G5rVlajrJ
— Disasters Daily (@DisastersAndI) May 22, 2025
கிரீஸ் பகுதியில் சக்தியாவ்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கிரீட் கடலோர பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
கடந்த வாரமும் கிரீஸில் ஏற்பட்ட நிலநடுக்கம்
கீரிஸில் இன்று (மே 22, 2025) ஏற்பட்டதை போலவே கடந்த வாரமும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது, கீரீஸ் நாட்டின் காசோஸ் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2025, ஜனவரி 26 முதல் பிப்ரவரி 13 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் கிரீஸின் சைக்லேட்ஸ் தீவுகளில் சுமார் 18,400 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.