மரண தண்டனை ரத்தாகுமா? போராடும் நிமிஷா பிரியா குடும்பத்தினர்… பின்னணி என்ன?

Kerala Nurse Nimisha Priya Case : கேரள செவிலியர் நிமிஷா பிரியா மரண தண்டனையில் இருந்நது விடுப்படுவது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ரத்தப் பணத்தை மாஹதி குடும்பத்தினர் நிராகரித்து வருகின்றனர். மேலும், மன்னிப்பே கிடையாது என்றும் கூறி வருகின்றனர். இதனால், நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க அவரது குடும்பத்தினர் போராடி வருகின்றனர்.

மரண தண்டனை ரத்தாகுமா? போராடும் நிமிஷா பிரியா குடும்பத்தினர்... பின்னணி என்ன?

நிமிஷா பிரியா

Updated On: 

16 Jul 2025 20:54 PM

ஏமன்,  ஜூலை 16 : கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு (Nimisha Priya Case) மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவின் குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று கொல்லப்பட்ட மஹ்தி சகோதரர் அப்தெல்ஃபத்தா மாஹதி கூறியிருக்கிறது. இது நிமிஷா பிரியாவுக்கு பிரச்னையை அதிகரித்துள்ளது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை (Nimisha Priya Execution) தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், மஹ்தி குடும்பத்தினரை அவரை மன்னிக்கவும், ரத்தப் பணத்தை வழங்கவும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். தற்போது, கேரள செவிலியல் ஏமன் சிறையில் உள்ளார். தலால் அப்து மாஹதி என்பவரை கொலை செய்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதனை 2025 ஜூலை 16ஆம் தேதியான இன்று நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போராடும் நிமிஷா பிரியா குடும்பத்தினர்

இதனால்,  மாஹதி குடும்பத்தினருடன், நிமிஷா பிரியாவில் தரப்பில் இருந்து பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. மாஹதி குடும்பத்தின் மன்னித்து, ரத்தப் பணத்தை ஏற்றுக் கொண்டால், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவதோடு, அவர் வெளியே வரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு.. வெளியான தகவல்கள்

இதனால், மாஹதி குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரூ. 11 கோடி ரத்தப் பணம் கொடுக்க நிமிஷா குடும்பத்தினர் முன்வந்துள்ளதாக தெரிகிறது.  ஆனால், ரத்தப் பணத்திற்கும், மன்னிப்பையும் மாஹதி குடும்பத்தினர் நிரகரித்தே வருகின்றனர். இதுகுறித்து மாஹதி சகோதரர் அப்தெல்ஃபத்தா மாஹதி கூறுகையில், “இன்று நடப்பதும், மத்தியஸ்தம் மற்றும் சமரச முயற்சிகள் பற்றிய பேச்சும் புதியதோ அல்லது ஆச்சரியமானதோ அல்ல.

’நிமிஷாவை மன்னிக்க முடியாது’

பல ஆண்டுகளாக, இரகசிய முயற்சிகளும் மத்தியஸ்தத்திற்கான தீவிர முயற்சிகளும் நடந்துள்ளன. ஆனால் அழுத்தம் எங்களை மாற்றவில்லை. எங்கள் கோரிக்கை தெளிவாக உள்ளது. நிமிஷா தனது குற்றத்திற்காக தூக்கிலிடப்பட வேண்டும். எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் ரத்தப் பணத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றார்.

மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டது குறித்து பேசிய அவர், “துரதிர்ஷ்டவசமாக. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அனைத்து சமரசங்களையும் நிராகரிக்கிறோம் என்பதை நன்கு தெரியும். எந்த ஒத்திவைப்பும் நம்மைத் தடுக்காது. எந்த அழுத்தமும் எங்களை அசைக்க முடியாது. இரத்தத்தை வாங்க முடியாது” என கூறினார்.

Also Read : நிமிஷா பிரியாவின் மரண தண்டனையைத் தடுக்க ஏமன் உச்ச நீதிமன்றத்தில் தீவிர பேச்சுவார்த்தை: கருணைக்கு ஒரு கடைசி வாய்ப்பு!

இதன் மூலம், நிமிஷா பிரியாவில் மரண தண்டனையில் விடுவிக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. இருப்பினும், தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.