Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Robert Francis Prevost : புதிய போப் தேர்வு.. யார் இந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட்?

Robert Francis Prevost Becomes First American Pope | கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் உயிரிழந்த நிலையில், அடுத்த போப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வத்திக்கானில் மே 07, 2025 அன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பின் படி ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Robert Francis Prevost : புதிய போப் தேர்வு.. யார் இந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட்?
ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 09 May 2025 07:51 AM

வத்திக்கான், மே 09 : கத்தோலிக்க (Catholic) திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (Pope Francis) உயிரிழந்த நிலையில், புதிய போப்பாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் (Robert Francis Prevost) தேர்வு செய்யப்பட்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் முதல் அமெரிக்க மதகுருவாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த போப் தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதிலும் உள்ள கர்தினால்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், ரகசிய வாக்கெடுப்பிற்கு பிறகு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், யார் இந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடல்நல குறைவால் உயிரிழந்த போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் 266 வது தலைவராக இருந்த போப் பிரான்சஸ் உடல் நலக்குறைவால் மார்ச் 21, 2025 அன்று வத்திக்கானில் (Vatican) உயிரிழந்தார். அவரது உடலுக்கு உலகம் முழுவதிலும் உள்ள கர்தினால்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து, யார் புதிய போப்பாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவரையும், கோப்பையும் தேர்வு செய்வதற்கான கூட்டம் மே 5, 2025 முதல் மே 10, 2025 தொடங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வத்திகானில் உள்ள சிஸ்டைன் தேவ ஆலயத்தில் புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் மொத்தம் 71 நாடுகளை சேர்ந்த சுமார் 133 கர்தினால்கள் பங்கேற்றனர். அவர்களின் வாக்குகளின் அடிப்படையில் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் புதிய கத்தோலிக்க திருச்சபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்ட ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட்

யார் இந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட்

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராபர்ட் பிரான்சிஸ் ப்ரோவேஸ்ட்க்கு 69 வயது ஆகிறது. இவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் அமெரிக்கர் ஆவார். அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த இவர், பெருவில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். தற்போது புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், 14 ஆம் லியோ என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசரி கே. கணேஷ் மகளின் திருமணம்.. ஒன்று திரண்ட கோலிவுட் பிரபலங்கள்
ஐசரி கே. கணேஷ் மகளின் திருமணம்.. ஒன்று திரண்ட கோலிவுட் பிரபலங்கள்...
பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!
பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!...
எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
ஏரிகளில் டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்: காரணம் என்ன?
ஏரிகளில் டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்: காரணம் என்ன?...
ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. என்ன படம் தெரியுமா?
ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. என்ன படம் தெரியுமா?...
1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்..
1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்.....
மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன் கைது
மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன் கைது...
ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா? - அரசு சொன்ன முக்கிய தகவல்!
ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா? - அரசு சொன்ன முக்கிய தகவல்!...
சென்னை: ராயப்பேட்டையில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை கடித்த நாய்..
சென்னை: ராயப்பேட்டையில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை கடித்த நாய்.....
திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த ஆச்சரியம் - நடிகை சாந்தினி!
திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த ஆச்சரியம் - நடிகை சாந்தினி!...
ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. மத்திய அரசு அதிரடி!
ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. மத்திய அரசு அதிரடி!...