Nepal Protest : நேபாளத்தில் வெடித்த ஜென் Z போராட்டம்.. நிதியமைச்சரை துரத்தி துரத்தி அடித்த போராட்டக்காரர்கள்!

Nepal Social Media Ban Protest | நேபாளத்தில் சமூக ஊடக செயலிகளுக்கு தடை விதித்ததால் அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் அந்த நாட்டின் நிதி அமைச்சர் போராட்டக்காரர்களால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Nepal Protest : நேபாளத்தில் வெடித்த ஜென் Z போராட்டம்.. நிதியமைச்சரை துரத்தி துரத்தி அடித்த போராட்டக்காரர்கள்!

வைரல் வீடியோ

Updated On: 

10 Sep 2025 08:36 AM

 IST

காத்மாண்டு, செப்டம்பர் 10 : நேபாளத்தில் (Nepal) சமூக ஊடகங்களுக்கு (Social Media) எதிரான தடை காரணமாக அங்கு ஜென் Z தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் வெடித்த இந்த போராட்டம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நேபாள நிதி அமைச்சர் போராட்டக்காரர்களால் சாலைகளில் துரத்தி அடிக்கப்படும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் வெடித்த போராட்டம் – அதிரடியாக களமிறங்கிய ஜென் Z தலைமுறை

நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், வரம்புகளுக்குள் பொருந்தாததால் சில சமூக ஊடகங்களை அந்த நாட்டு அரசு தடை செய்தது. அதாவது உலகம் முழுவதும் மிகவுக் பிரபலாக பயன்படுத்தப்படும் சமூக ஊடக செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் ஆகிய 26 சமூக ஊடக செயலிகள் முடக்கம் செய்யப்பட்டன. நேபாள அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : மீண்டும் ஒருமுறை என் மீது மோது பேபி பாடலை பாடிக்கொண்டு கார் ஓட்டிய பெண்.. விபத்தில் சிக்கிய பகீர் காட்சி வைரல்!

குறிப்பாக ஜென் Z தலைமுறையினர் மத்தியில் இந்த விவகாரம் விஸ்வரூபமாக மாறியது. இதன் காரணமாக டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான ஜென் Z இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் எல்லையை மீறி சென்ற நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நிதியமைச்சரை சாலையில் விரட்டி அடித்த போராட்டக்காரர்கள்

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோக்களில் போராட்டக்காரர்களிடம் சிக்கொண்ட நேபாள நிதி அமைச்சர், பிஷ்ணு பிரசாத்தை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக இணையத்தில் வைராகி வரும் வேறு சில வீடியோக்களில் அவர் ஆடைகள் களையப்பட்டு ஆற்றில் விரட்டி அடிக்கப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோக்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.