செவ்வாயில் பிரம்மாண்ட கடற்கரை.. வியக்க வைக்கும் நாசாவின் கண்டுபிடிப்பு.. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதாரங்கள்!

NASA Discovers An Ancient Shoreline In Mars | உலகம் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

செவ்வாயில் பிரம்மாண்ட கடற்கரை.. வியக்க வைக்கும் நாசாவின் கண்டுபிடிப்பு.. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதாரங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

06 Feb 2026 13:01 PM

 IST

மனிதர்கள் வாழும் இந்த பூமி தன்னுல் பல்வேறு அதிசயங்களை மறைத்து வைத்துள்ளது. அதனை கண்டுபிடிப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், செய்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற முடியுமா என்ற கேள்விக்கு விடை தேடும் ஆய்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அலைகள் வந்து மோதிய பழங்கால கடற்கரையை கண்டறிந்துள்ளது. இது உலக அளவில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய் கிரகம் குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரம்மாண்ட ஏரி கரை

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை சோதனை செய்ய ஜெஸீரோ கிரேட்டர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரோவர் அங்குள்ள பாறைகளை ஆராயும்போது அவை அலைகளால் அரிக்கப்பட்டு உருண்டையாக மாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் பிரம்மாண்ட ஏரியின் கரையாக இருந்திருக்கிறது என்பதை காட்டும் விதமாக அது அமைந்துள்ளது.

இதையும் படிங்க : எப்ஸ்டீன் ஃபைல்ஸ் – அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன் – ஜார்ஜ் புஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பூமியை போலவே இருந்த செவ்வாய் கிரகம் – ஆய்வில் தகவல்

முன்னதாக லண்டனை சேர்ந்த இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வின்படி, செவ்வாய் கிரகம் ஒரு காலக்கட்டத்தில் பூமியை போலவே இதமான காலநிலையையும், ஓடும் நீரையும் கொண்டு இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அங்கு கண்டறிப்பட்ட கார்பனேட் தாதுக்கள், பண்டைய காலத்து தகவல்களை தங்களுக்குள் சீல் செய்து வைக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : காங்கோவில் சுரங்க விபத்து.. 200 பேர் பலியான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

பூமியிலும் இதேபோல நீர்நிலைகளுக்கு அடியே நுண்ணுயிர்கள் வாழ்வது வழக்கம். எனவே செவ்வாயிலும் ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த நிலையில், தற்போது செவ்வாயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் என்பது ஒரு வரண்ட கிரகம் மட்டுமன்றி முந்தைய காலக்கட்டத்தில் அங்கு உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பூசணிகள் நிறைந்த லாரியில் வெடிபொருட்கள்! பாலக்காட்டில் நடந்த சம்பவம்
ஆன்லைன் கேமால் பறிபோன 3 சிறுமிகளின் உயிர் - தற்கொலை கடிதத்தால் அதிர்ச்சி
ஸ்ருதி ஹாசனால் தான் எங்கள் மகள் உயிரோடிருக்கிறார்... - சிறுமியின் பெற்றோர் உருக்கம்
அழகான வெற்றிச் சின்னம்... இந்தியா கேட் போட்டோவை பகிர்ந்து டிரம்ப் கருத்து