அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். எம்எஸ்எம்டி எனப்படும் அபூர்வமான நோயுடன் பிறந்த குழந்தை ஆழ்விக்கு உயிர்காக்கும் சிகிச்சை கிடைக்க முக்கிய காரணமாக இருந்த ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் அந்த குழந்தையையும் அதன் பெற்றோர்களையும் நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பு, அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில், ஸ்ருதி ஹாசன், சிறுமி ஆழ்வியுடன் விளையாடியபடி புன்னகையுடன் பேசும் காட்சிகள் பலரின் மனதை உருக்கின.