பெலாரஸ் உடனான எல்லையை மூடிய லித்துவேனியா.. மர்ம பலூன்கள் பறந்ததை தொடர்ந்து நடவடிக்கை!

Lithuania Closes Belarus Border | உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் ஏற்கனவே லித்துவேனியா மற்றும் பெலாரஸ் இடையே சுமூகமற்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பெலாரஸ் மர்ம பலூன்களை பறக்க விடுவதாக குற்றம் சாட்டி லித்துவேனியா பெலாரஸ் உடனான எல்லையை மூடியுள்ளது.

பெலாரஸ் உடனான எல்லையை மூடிய லித்துவேனியா.. மர்ம பலூன்கள் பறந்ததை தொடர்ந்து நடவடிக்கை!

பெலாரஸ் எல்லை

Updated On: 

15 Nov 2025 07:51 AM

 IST

வில்னியாஸ், நவம்பர் 15 : ஐரோப்பிய (Europe) நாடான லித்துவேனியா (Lithuania), பெலாரஸ் (Belarus) உடனான எல்லையை மூடியுள்ளது. நேட்டோ (NATO – North Atlantic Treaty Organization) அமைப்பின் உறுப்பினரான லித்துவேனியா, பெலாரஸ் அருகே அமைந்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போரில் (Ukraine – Russia War) லித்துவேனியா உக்ரைனுக்கு ஆதராவாக செயல்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அண்டை நாடுகளாக லித்துவேனியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே சற்று அமையற்ற சூழல் நிலவி வருகிறது.

மர்ம பலூன்கள் பறக்கவிடப்பட்டதாக லித்துவேனியா குற்றச்சாட்டு

ஏற்கனவே இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமூகமற்ற சூழல் நிலவும் நிலையில், பெலாரசில் இருந்து தங்களது நாட்டுக்குள் மர்ம பலூன்கள் பறக்கவிடப்படுவதாக லித்துவேனியா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. விமான நிலையங்களை குறிவைத்து இந்த மர்ம பலூன்கள் பறக்க வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக லித்துவேனியாவில் உள்ள தலைநகர் வில்லியன்ஸ் உட்பட முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டு அங்கு விமான போக்குவரத்து சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : இரண்டு நாட்களாக கடும் இருமளால் அவதி அடைந்த இளம் பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மர்ம பலூன்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் லித்துவேனியா

இவ்வாறு பெலாரசில் இருந்து பறக்கவிடப்படும் மர்ம பலூன்களில் போதைப் பொருட்கள், சிகிரெட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்திச் செல்வதாக லித்துவேனியா குற்றம் சாட்டி வருகிறது. இவ்வாறு லித்துவேனியா மற்றும் பெலாரஸ் இடையே அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், தற்போது பெலாரஸ் உடனான எல்லையை லித்துவேனியா மூடியுள்ளது. இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜப்பானை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. சுமானி எச்சரிக்கை!

பெலாரசுக்கு எச்சரிக்கை விடுத்த லித்துவேனியா

பெலாரஸ் உடனான எல்லையை மூடியது மட்டுமன்றி, மர்ம பலூன்களை பறக்க விடுவதை பெலாரஸ் தடுக்கவில்லை என்றால் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று லித்துவேனியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பெலாரஸ் மற்று லித்துவேனியா இடையே சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.