செக்க சிவந்த ஸ்பெயின்.. மாறி மாறி தக்காளி அடித்து கொண்டாட்டம்… ஏன் தெரியுமா?

Spain Tomato Festival : ஸ்பெயின் நாட்டில் 80வது ஆண்டு தக்காளி திருவிழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. இந்த திருவிழாவில் 22,000 மக்கள் கலந்து கொண்டு, ஒருவரைக்கொருவர் மீது தக்காளி அடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதற்காக 150 டன் கணக்கில் தக்காளி கொண்டு வரப்பட்டது.

செக்க சிவந்த ஸ்பெயின்.. மாறி மாறி தக்காளி அடித்து கொண்டாட்டம்... ஏன் தெரியுமா?

ஸ்பெயினில் தக்காளி வீசும் திருவிழா

Updated On: 

28 Aug 2025 07:59 AM

ஸ்பெயின், ஆகஸ்ட் 28 :  ஸ்பெயினின் தக்காளி திருவிழா (Spain Tomato Festival) கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. தக்காளி திருவிழாவின் 80ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் மீது தக்காளி அடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஸ்பெயினின் பாரம்பரிய திருவிழாவாக தக்காளி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன்கிழமை அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த தக்காளி திருவிழா 1945ஆம் ஆண்டு முதல் ஸ்பெயின் கொண்டாட்டப்படுகிறது. இந்த திருவிழவை அந்நாட்டு அரசு பாரம்பரிய திருவிழாவாக அங்கீகரித்தது.

இதற்காக விடுமுறையும் கூட விடுகிறதாம். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு ஸ்பெயின் 80ஆம் ஆண்டு தக்காளி திருவிழாவை கொண்டாடியது. 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான நேற்று ஸ்பெயினில் கோலாகலமாக தக்காளி விழா கொண்டாடப்பட்டது. பினோல் நகரில் லா டொமாடினா எனும் தாக்களி திருவிழாவுக்காக ஒரு டிரக்கில் 150 டன் கணக்கல் தக்காள் கொண்டு வரப்பட்டது. அதில் இருந்த தக்காளி கீழே கொட்டப்பட்டதும், அங்கிருந்த மக்கள் ஒருவரைக்கொருவர் மீது தாக்காளி வீசி அடித்தனர்.

Also Read : பூமியை நோக்கி வரும் மர்ம பொருள்.. ஏலியன் ஸ்பேஸ்ஷிப்பா?.. விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மாறி மாறி தக்காளி அடித்து கொண்டாட்டம்


தக்காளியில் உருண்டு பேரண்டும் கொண்டாடினர். கூழாக்கப்பட்ட தக்காளி சாற்றில் இளம்பெண்கள், இளைஞர்கள் என ஆனந்தமாக குளியலிட்டு கொண்டாடினர்தொடர்ந்து, அங்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் 22,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான வீடியோ, புகைப்படங்களில் இணையத்தில் பலரையும் ஈர்த்துள்ளது.

சாப்பிடும் தக்காளி இல்லையாம்

என்னடா தக்காளி இப்படி வீணாக்கப்படுகிறது என்ற கேள்வியும் சிலருக்கு எழும். ஆனால், இது நாம் சாப்பிடும் தக்காளி கிடையாது. இந்த திருவிழாக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறதுஇந்த திருவிழா நடைபெறவில்லை என்றால் இதற்காக தக்காளி பயிரடவே மாட்டோம் என அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தக்காளி பிரத்யேமாக டான் பெனிட்டோவில் இருந்து விளைவிக்கப்பட்டு எடுத்து வரப்படுகிறது.

இந்த திருவிழாவுக்காக நடுவர்கள் என யாரும் கிடையாதாம். ஆனால், இந்த திருவிழாவுக்கு சில விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, இந்த திருவிழாவில் பங்கேற்பவர்கள் யாருக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாதாம். மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்குமாம். இதனால், சிலர் தற்காப்பு சாதனங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Also Read : தொங்கு பாலம் வெயிட் தாங்குமா? 96 கனரக லாரிகளை ஓட்டி சோதனை.. மாஸ் செய்த சீனா!

தக்காளி திருவிழா கொண்டாடப்படுவது ஏன்?

1945ஆம் ஆண்டு ஸ்பெனில் இருந்து இரண்டு சிறுவர்களுக்கு இடையே சாப்பாடு தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், அப்போது, இரு குடும்பத்தினரும் ஒருவரைக்கொருவர் தக்காளி வீசி தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து, ஆண்டுதோறும் இந்த தக்காளி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா உலக நாட்டு மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்தது, 2002ஆம் ஆண்டு பாரம்பரிய திருவிழாவாக அந்நாட்டு அரசு அங்கீகரித்தது. தொடர்ந்து, இந்த திருவிழா பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. லண்டன், கொலம்பியா, ஹைதரபாத்தில் கொண்டாட்டப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.