அமெரிக்காவில் படித்து வந்த இந்திய இளைஞர் திடீர் மாயம்.. அதிர்ச்சி சம்பவம்!
Karnataka Student Goes Missing In America | இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் முதுகலை படித்து வந்த நிலையில், அவர் திடீரென காணாமல் போயுள்ளார். அவரது பை மட்டும் கிடைத்துள்ள நிலையில், அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
நியூயார்க், பிப்ரவரி 15 : அமெரிக்காவில் (America) படித்து வந்த 22 வயது இந்திய இளைஞர் காணாமல் போயுள்ளார். மாணவர் காணாமல் போன நிலையில், அவரது உடமைகள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதுகலை படித்து வந்த மாணவர் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த மாணவரை கண்டுபிடிக்கும் தீவிர பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் படித்து வந்த இந்திய இளைஞர் திடீர் மாயம்
இந்தியாவின் (India) கர்நாடகா (Karnataka) மாநிலத்தை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா என்ற 22 வயது இளைஞர். இவர் கலிஃபோர்னியாவின் (California) பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்துள்ளார். இந்த நிலையில், பிப்ரவரி 10, 2026 அன்று அவர் திடீரென காணாமல் போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சீனாவில் கலைக்கட்ட தொடங்கிய புத்தாண்டு.. பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ஜி ஜின்பிங்!
இளைஞர் காணாமல் போன நிலையில், அவரது பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பை பார்க் ஹில்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த இளைஞர் கடைசியாக டுவைட் வேயின் 1700 பிளாக்கில் காணப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். தற்போது வரை அந்த இளைஞர் குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில், போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கவலை தெரிவித்துள்ள இந்திய தூதரகம்
இந்திய மாணவர் காணாமல் போன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக இந்திய தூதரகம் கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியுள்ள இந்திய தூதரகம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா காணாமல் போனது அழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்துடன் தூதரகம் தொடர்பில் உள்ளது.
இதையும் படிங்க : யுரேனஸ் கிரகத்தின் நிலவில் பிரம்மாண்ட கடல்?.. வியப்பூட்டும் கண்டுபிடிப்பு!
அவரை கண்டுபிடிக்க உள்ளூர் அதிகாரிகள் உடன் தொடர்பில் உள்ளோம் என்று இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.