யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலவு.. ஜேம்ஸ் வெப் மூலம் நாசா கண்டுபிடிப்பு!

New Uranus Moon | நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை வைத்து யுரேனஸ் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் யுரேனஸ் கிரகத்தில் புதிய நிலவு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதில் ஏற்கனவே 28 நிலவுகள் இருந்த நிலையில், தற்போது 29வது நிலவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலவு.. ஜேம்ஸ் வெப் மூலம் நாசா கண்டுபிடிப்பு!

புதிய யுரேனஸ் நிலவு

Published: 

21 Aug 2025 08:21 AM

வாஷிங்டன், ஆகஸ்ட் 21 : யுரேனஸ் (Uranus) கிரகத்தை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி (James Web Telescope) மூலம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது. இதன் காரணமாக யுரேனஸ் கிரகத்தை சுற்றி வரும் மொத்த நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை கொண்டு பிரத்யேகமாக யுரேனஸ் கிரகத்தை ஆராய்ந்து வரும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், யுரேனஸை சுற்றி வரும் இந்த நிலவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுரேனஸ் கிரகத்தை சுற்றி வரும் மேலும் ஒரு நிலா

பல்வேறு உலக நாடுகள் விண்வெளி தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா நிலவு  குறித்த பிரத்யேக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், நிலவுக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவது, விஞ்ஞானிகளை அனுப்பி ஆய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA – National Aeronautics and Space Administration) கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானை ஒரே மாதத்தில் உலுக்கிய மூன்றாவது நிலநடுக்கம்.. 4.9 ரிக்டர் ஆக பதிவு!

சுமார் ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில், அதிநவீன மற்றும் மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்பை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தி வைத்துள்ளது. இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்ணில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அவ்வப்போது வெளியிடும் விண்வெளி குறித்த புகைப்படங்கள் வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கும்.

புதிய நிலாவை கண்டுபிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

தற்போது பால்வெளி மண்டலத்தின் 7வது கிரகமான யுரேனஸை இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் யுரேனஸ் கிரகத்தை மேலும் ஒரு நிலவு சுற்றி வருவதை அது கண்டுபிடித்துள்ளது. யுரேனஸ் கிரகத்தை ஏற்கனவே 28 நிலவுகள் சுற்றி வரும் நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள இந்த மேலும் ஒரு நிலவு காரணமாக யுரேனஸ் கிரகத்தை சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : 10 ஆண்டுகள் மர்மம்.. கூட்டம் கூட்டமாக இறந்த நட்சத்திர மீன்கள்.. உண்மையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!

யுரேனசை சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய நிலவுக்கு நாசா இன்னும் பெயரிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.