’நாங்க சரணடைய மாட்டோம்’ அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. கலக்கத்தில் இஸ்ரேல்!

Israel Iran Conflict : இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கையை ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா கமேனி விடுத்துள்ளார். அதாவது, ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அமெரிக்கா தலையிட்டால் சரி செய் முடியாத சேதத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

’நாங்க சரணடைய மாட்டோம் அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. கலக்கத்தில் இஸ்ரேல்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்

Updated On: 

18 Jun 2025 17:41 PM

 IST

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே போர் பதற்றம்  (Israel Iran Conflict) நீடித்து வருகிறது. கடந்த 6 நாட்களாக இருநாடுகளும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கையை ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா கமேனி (Ayatollah Ali Khamenei) விடுத்துள்ளார். அதாவது, ”ஈரான் ஒருபோதும் சரணடையாது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியன் மூலம் இஸ்ரேல் பெரும் தவறு இழைத்துவிட்டது. இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்கா தலையிட்டால் சரி செய் முடியாத சேதத்தை சந்திக்க வேண்டியிருக்கும்” என தெரிவித்திருக்கிறார். 2025 ஜூன் 15ஆம் தேதி இஸ்ரேல் ஈரானுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஈரானினி ஆணு ஆயுதங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சைரிங் லயன் என்ற பெயரில் ஈரான் அனு ஆயுத நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இப்படி இருநாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரான் இஸ்ரேல் பதற்றம்

ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஒழித்து கட்டவே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இருநாடுகளுக்கு  இடையே பதற்றத்தை தணிக்க உலக நாடுகள் முன்வந்துள்ளனர். குறிப்பாக, இஸ்ரேலின் நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா இந்த விஷயத்தில் தீவிரமாக  இறங்கியுள்ளது.

குறிப்பாக, ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு அமெரிக்கா அதிபர் டிரம்பும் எதிர்த்து வருகிறார். அண்மையில் கூட பேசிய டிரம்ப், “ஈரானின் உயர்மட்ட தலைவர் கமேனி எங்கு இருக்கிறார் என்பது தெரியும். இருப்பினும் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. இதனால், அவர் சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு” என கூறியுள்ளார்.

அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

அதோடு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஈரான் உயர்மட்ட தலைவர் கமேனியை அழிப்பதை இந்த மோதலுக்கு முடிவாகும் எனவும் தெரிவித்திருந்தார். இப்படியான சூழலில், ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சரணடைவதே ஒரே தீர்வு என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு, கமேனி பதிலடி கொடுத்துள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய கமேனி, “நாங்கள் யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் பயந்து சரணடைய மாட்டோம். எப்போதும் அது நடக்காது. எங்கள் மக்கள், அவர்களின் பாதுகாப்பில் எந்த தயக்கத்தையும் காட்ட மாட்டோம். நாங்கள் தீவிரமாக பதிலடி கொடுப்போம்.

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது. இதற்கு நிச்சயம் தண்டிக்கப்படும். அமெரிக்கா தலையிட்டால் சரி செய் முடியாத சேதத்தை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று கூறியிருக்கிறார். இதற்கு  அமெரிக்கா எந்த மாதிரியான பதிலடி கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories
இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க தயாராகும் டிரம்ப்.. இந்த முறை விவசாயிகளை குறி வைக்கிறார்!
வெளிநாட்டவர்களை கட்டாயமாக ராணுவத்தில் இணைக்கும் ரஷ்யா.. சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு!
Japan Earthquake: ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!
கலைக்கட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை.. நியூயார்க்கில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!
மயங்கிய ஓட்டுனர்.. வானில் பறந்த பென்ஸ் கார்.. ஷாக்கிங் விபத்தின் வைரல் வீடியோ!!
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்தியா – ரஷ்யா தலைவர்கள் சந்திப்பு.. என்ன சொல்கிறது? சீனா விளக்கம்..
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை