“அவ்வளவு திறமையானவராக இருந்தால்”.. டிரம்புக்குக்கு நேரடி சவால் விட்ட ஈரான் தலைமை மதகுரு!

Iran Supreme Leader Ali Khamenei Open Challenge | ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய நிலையில், அதற்கு ஈரான் தலைமை மதகுரு விளக்கமளித்துள்ளார்.

அவ்வளவு திறமையானவராக இருந்தால்.. டிரம்புக்குக்கு நேரடி சவால் விட்ட ஈரான் தலைமை மதகுரு!

ஈரான் மதகுரு அலி கமேனி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

Published: 

12 Jan 2026 08:32 AM

 IST

டெஹ்ரான், ஜனவரி 12 : ஈரான் (Iran) அரசுக்கு எதிராக அங்கு நாளுக்கு நாள் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது, நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது என கூறி பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு சற்று நிலமை மோசமாக உள்ளது. இவ்வாறு ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தனது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில், டிரம்பின் கருத்துக்கு அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரானில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உள்நாட்டு போராட்டங்கள்

ஈரானில் கடந்த சில மாதங்களாக பொருளாதர நெருக்கடி உள்ளிட்ட சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு பணவீக்கம் மிக கடுமையான உயர்வை சந்தித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விலை ஏற்றம் காரணமாக அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளதால் மக்கள் மத்தியில் கடும் கோபம் உருவாகியுள்ளது. அதன் வெளிப்பாடாக அங்கு கடந்த சில மாதங்களாகவே பல்வேறு போரட்டங்கள் வெடித்து வருகின்றன.

இதையும் படிங்க : இந்தியாவுக்கான விசா, தூதரக சேவைகளை நிறுத்திய வங்காளதேச அரசு.. முக்கிய அறிவிப்பு!

ஈரான் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா

ஈரான் மக்களின் இந்த தொடர் போராட்டங்கள் பொருளாதார நிலைக்கு எதிரானதாக மட்டுமன்றி, தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கும் எதிரானதாக மாறி வருகிறது. இதன் காரணமாக ஈரானில் அரசு இணைய சேவையை துண்டித்து, தகவல் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் குரலை அடக்கும் முயற்சி என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இதையும் படிங்க : பிரதமர் மோடியுடன் நல்ல நட்பு.. ஆனாலும்.. வரி விதிப்பு குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப்!

இந்த நிலையில், ஈரானில் அரசுக்கு எதிராக மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி, போராட்டக்காரர்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா களமிறங்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி பதில் அளித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், ஈரான் அரசு எதை செய்தாலும், போராட்டக்காரர்களுடன் சேர்ந்துக்கொள்வேன் என்று அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் நினைக்கிறார். அவ்வளவு திறமையானவராக இருந்தால் அவர் தான் ஈரானை வழிநடத்தட்டும் என்று கூறியுள்ளார்.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!