Iran Israel Tension: இஸ்ரேலுக்கு ஆதரவு? ஈரான் எதிராக பாகிஸ்தான் அணுகுண்டு மிரட்டலா..? அதிகரிக்கும் பதட்டம்!

Pakistan Nuclear Bomb: இஸ்ரேல்-ஈரான் இடையேயான ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் ஈரானின் மீது அணுத் தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் இஸ்ரேலின் மீது அணுத் தாக்குதல் நடத்துவதாக ஈரானிய அதிகாரி கூறியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இந்தக் கூற்றை மறுத்துள்ளது. இஸ்ரேலின் சமீபத்திய “ஆபரேஷன் ரைசிங் லயன்” தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது ஏவுகணைகளை ஏவியது. இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானின் தரப்பு மிக முக்கியமானது.

Iran Israel Tension: இஸ்ரேலுக்கு ஆதரவு? ஈரான் எதிராக பாகிஸ்தான் அணுகுண்டு மிரட்டலா..? அதிகரிக்கும் பதட்டம்!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் - ஈரான் புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி ஜெனரல் மொஹ்சென் ரெசாய்

Published: 

16 Jun 2025 16:36 PM

 IST

ஈரான், ஜூன் 16: ஈரானும் இஸ்ரேலும் கடந்த சில நாட்களாக ஒன்றுக்கொன்று ஏவுகணைத் தாக்குதல்களை (Iran Israel Tension) நடத்தி வருகிறது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதலை (Pakistan Nuclear bomb) நடத்தினால், பாகிஸ்தான் அதன் மீது அணுகுண்டுகளை வீசும் என்று ஈரானிய இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளது, மேலும் பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் இந்த கூற்றை முற்றிலுமாக நிராகரித்ததுடன், அத்தகைய கருத்துகள் எதையும் கூறவில்லை என தெரிவித்துள்ளது.

ஈரான் கூறியது என்ன..?

ஈரானின் புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதியும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாய், சமீபத்தில் ஈரானிய அரசு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இஸ்ரேல் ஈரான் மீது அணுகுண்டை பயன்படுத்தினால், பாகிஸ்தானும் இஸ்ரேலை அணுகுண்டால் தாக்கும் என்று பாகிஸ்தான் எங்களிடம் கூறியுள்ளது. இஸ்ரேலை எதுவும் செய்ய அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அணுகுண்டு தாக்குதலா..?

என்ன நடக்கிறது..?

கடந்த 2025 ஜூன் 13ம் தேதி “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணு, இறானுவ மற்றும் எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியதாக செய்திகள் வெளிவந்தது. இந்த தாக்குதல்களில் 4 மூத்த ஈரானிய இராணுவத் தளபதிகள், 6 அணு விஞ்ஞானிகள் மற்றும் 78 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்க முயற்சித்த ஈரான், இஸ்ரேல் மீது 100க்கு மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசியது.

பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதலை நடத்துமா..?

ஈரான் இராணுவ படை தளபதியின் இந்த கூற்றுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், “இஸ்ரேலுக்கு எதிரான அணு ஆயுதத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் எதுவும் பேசவில்லை. இத்தகைய நோக்கம் எதுவும் இல்லை. பாகிஸ்தான் நிச்சயமாக ஈரானுக்கு ஆதரவை வழங்கும். அதேநேரத்தில் இஸ்ரேலின் கருத்திற்கு கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்” என்றார். முன்னதாக, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சில நாட்களுக்கு முன்பு, ”நாங்கள் எல்லா வகையிலும் ஈரானுடன் நிற்கிறோம். ஈரானிய நலன்களைப் பாதுகாப்போம்.” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துமனை... தாயின் உடலை ஸ்ட்ரெச்சரில் சுமந்து சென்ற மகன்கள்
உத்திரப்பிரதேசத்தில் தொடரும் ஓநாய் தாக்குதல்.. பீதியில் பொதுமக்கள்..
திருப்பதி வைகுண்ட ஏகாதசி.. சிறப்பு டிக்கெட்டுகளை அறிவித்த தேவஸ்தானம்..
25 மணி நேரம்... உலகின் நீண்ட நேரம் பயணிக்கும் விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா