ஹோர்முஸ் நீரிணையை திறக்க 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்!
Trump's 48 Hours Deadline To Open Strait of Hormuz | ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளதன் காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், ஹோர்முஸை திறக்க டிரம்ப் வெளியிட்டுள்ள காலக்கெடுவை ஈரான் நிராகரித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
தெஹ்ரான், ஏப்ரல் 07 : ஈரான் (Iran) மீது அமெரிக்கா (America) மற்றும் இஸ்ரேல் (Israel) தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடி வைத்துள்ளது. இதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, உலக நாடுகள் ஸ்தம்பித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) இரண்டு நாட்கள் கெடு வைத்த நிலையில், ஈரான் அதனை நிராகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூலம் பதிலடி கொடுத்த ஈரான்
அணு ஆயுதங்களை தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தாக்குதல் நடத்தியது. அந்த வகையில், ஹோர்முஸ் நீரிணையை மூடி ஈரான் கடும் நெருக்கடி கொடுத்தது. இதன் காரணமாக ஈரான் மீதான போர் சர்வதேச பிரச்னையாக மாறியது. காரணம், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக நாடுகள் கேஸ் சிலிண்டர் மட்டும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகளை எதிர்க்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வரும் நிலையில், அதனை திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 48 மணி நேரம் வரை கெடு வைத்திருந்தார். அதாவது ஏப்ரல் 07, 2026 இரவு 8 மணி வரை கால அவகாசம் வழங்குவதாக கூறினார். இல்லை என்றால் ஈரானின் பாலங்கள், உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவின் நிபந்தனையை நிராகரித்த ஈரான்
டிரம்பின் இந்த எச்சரிக்கை நிராகரித்துள்ள ஈரான், இது முட்டாள்தனம் என்றும் கூறியுள்ளது. டிரம்பின் இறுதி எச்சரிக்கைக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், போர் நிறுத்த முன்மொழிவை நிராகரிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனை பாகிஸ்தான் மூலம் ஈரான் உறுதி செய்துள்ளதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் தலைவர் மொஜ்தபா கூறியதாவது, நாங்கள் வெறுமனே போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மீண்டும் நாங்கள் தாக்கப்பட மாட்டோம் என்ற உத்தரவாதங்களுடன் மட்டுமே போர் முடிவுக்கு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.