ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க போவதில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்!

Donald Trump On Iran War Issue | ஈரான் மீது 5 நாட்களுக்கு தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அணு ஆயுதங்களை வைத்திருக்க போவதில்லை என ஈரானும் ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க போவதில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Updated On: 

25 Mar 2026 07:56 AM

 IST

வாஷிங்டன், மார்ச் 25 : அணு ஆயுதங்களை (Nuclear Weapon) வைத்திருக்க போவதில்லை என்று ஈரான் (Iran) ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். ஈரான் மீது தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், ஈரானின் அணு ஆயுத நிலைப்பாடு குறித்து டிரம்ப் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி தாக்குதல்களை நடத்தியது. இவ்வாறு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நிலவி வந்த நிலையில், 5 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இதையும் படிங்க : டிரம்ப் உருவம் பதித்த தங்க நாணயத்தை வெளியிடும் அமெரிக்கா.. உருவான சர்ச்சை!

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறினார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஈரான் கூறியிருந்தது. இந்த நிலையில் தான் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை வைத்திருக்க போவதில்லை என ஈரான் ஒப்புதல்?

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இருக்கிறோம். மற்றொரு பக்கம் ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புகிறோம். ஈரானின் அனைத்து விமான எதிர்ப்பு அமைப்புகளும் பெரும்பாலான ஏவுகணைகளும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டன. உலகிலேயே மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையங்களில் ஒன்றை துல்லியமாக தாக்கும் வாய்ப்பு எங்களிடம் இருந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதால் அதனை நிறுத்தியுள்ளோம்.

இதையும் படிங்க : ஹார்முஸ் நீரிணையை கடக்க ரூ.18 கோடி கட்டணம்.. ‘சுங்க வரி’ விதித்து ஈரான் அதிரடி!

அணு ஆயுதங்களை வைத்திருக்க போவதில்லை என ஈரானும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்