வங்காளதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்து இளைஞர்.. நீதி கேட்டு டெல்லியில் வெடித்த போராட்டம்.. பரபரப்பு!

Huge Protest Erupted In Bangladesh High Commission In New Delhi | கடந்த வாரம் வங்காளதேசத்தில் இந்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து அவரின் மரணத்திற்கு நீதி கோரி டெல்லியில் பெரிய போராட்டம் வெடித்துள்ளது.

வங்காளதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்து இளைஞர்.. நீதி கேட்டு டெல்லியில் வெடித்த போராட்டம்.. பரபரப்பு!

டெல்லி போராட்டம்

Updated On: 

23 Dec 2025 13:42 PM

 IST

டெல்லி, டிசம்பர் 23 : கடந்த வாரம் வங்காளதேசத்தில் (Bangladesh) திப்பு தாஸ் என்ற இந்து இளைஞர் ஒருவர் இஸ்லாமிய குழுவால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி, தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தற்போது டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது. டெல்லியில் உள்ள வங்காளதேசத்தின் உயர் கமிஷன் ஆணையத்தின் முன்பு இந்த போராட்டம் வெடித்துள்ளது. வங்காளதேசத்தில் இந்துக்குகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்களின் மத ஸ்தலங்கள் சேதப்படுத்தபடுவதாக கூறப்படுவதை கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போரத்தை நடத்தி வருகின்றன.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்துறை

டெல்லியில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், உயர் கமிஷன் ஆணையத்தின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடுப்புகள் போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில், சில போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. பல அடுக்குகள் பேரிகார்டுகள் போடப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், போராட்டக்காரர்கள் இரண்டு அடுக்கு பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு உள்ளே செய்ய முயற்சி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : உத்தரகாண்டில் இனி அனைத்து அரசு பள்ளிகளில் பகவத் கீதா கட்டாயம்.. அரசு உத்தரவு!

நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி போராடும் போராட்டக்காரர்கள்

இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள போராட்டக்காரர்கள் தங்களது கைகளில் பதாகைகளை ஏந்திக்கொண்டு திப்பு தாஸின் மரணத்திற்கு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து முன்கூட்டியே கணித்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று அடுக்கு பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு போராடி வரும் நிலையில், அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..
புர்ஜ் கலீஃபாவை தாக்கிய மின்னல்.. அதிர்ச்சி வீடியோவைப் பகிர்ந்த துபாய் இளவரசர்!!
ஒரு வாழைப்பழம் இயற்கையாக பழுக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? - நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்த வீடியோ
தேர்வர்களுக்கான குட்நியூஸ்.. RRB 2026 தேர்வு காலண்டர் வெளியீடு!