“விரைவில் முடியும்” பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா.. டிரம்ப் சொன்ன முக்கிய விஷயம்!
India Pakistan Conflict : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளது. அவர் கூறியதாவது, "இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தணியும். இருநாட்டு தாக்குதலை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அமெரிக்கா, மே 07 : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளது. அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தணியும். இருநாட்டு தாக்குதலை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 2025 மே 7ஆம் தேதியான இன்று பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடியை தொடங்கியுள்ளது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடியை கொடுத்துள்ளது. நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களின் மீது இந்திய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா
காஷ்மீரில் உள்ள முசாபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட், சக் அமரு, முரிட்கே, பஹவல்பூர் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. 1971ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை என மூப்படைகளும் சேர்ந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது.
பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைக்கவில்லை என்றும் இந்தியா தெளிவுப்படுத்தி இருக்கிறது. இருப்பினும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உறுதியளித்தார். இதனால், இருநாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனவும் இந்தியா ராணுவம் பெயரிட்டுள்ளது. இந்த தாக்குதலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு தாக்குதல் குறித்து இந்தியா எடுத்துரைத்தது. இந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
டிரம்ப் சொன்ன முக்கிய விஷயம்
#WATCH | #OperationSindoor | US President Donald Trump’s first comments on Indian strikes inside Pakistan.
US President says “It’s a shame. We just heard about it as we were walking in the doors of the Oval. I guess people knew something was going to happen based on a little bit… pic.twitter.com/KFdNC1OCJT
— ANI (@ANI) May 6, 2025
அதாவது, ”இது ஒரு அவமானம். நாங்கள் ஓவல் மைதானத்தின் வாசலில் நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிக் கேள்விப்பட்டோம். கடந்த காலத்தின் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏதோ நடக்கப் போகிறது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
நீங்கள் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், அவர்கள் பல, பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாகப் போராடி வருகின்றனர். இது மிக விரைவாக முடிவடையும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றுவது பற்றி பாகிஸ்தானிடம் யோசிக்கக்கூட வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார்.