பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

Universe Update Alert : பிரபஞ்சம் குறித்து அமெரிக்காவின் ராட்பவுட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியானது. இந்த ஆய்வில் முன்பு கணிக்கப்பட்டதை விட விரைவில் இந்த பிரபஞ்சம் அழியும் எனவும் ஆனால் அதற்கு மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பதும் தெரியவந்திருக்கிறது.

பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

14 May 2025 21:49 PM

பிரபஞ்சத்தின் (Universe) முடிவை பற்றிய ஆராய்ச்சிகள் எப்போதும் மக்களுக்கு ஆச்சரியம் அளிக்கின்றன. ராட்பவுட் பல்கலைக்கழகத்திலிருந்து வானியல் ஆய்வாலளர்களின் புதிய ஆய்வு, பிரபஞ்சத்தின் முடிவு விரைவில் வரும் என்று கூறுகிறது. அதாவது, ஒரு குவின்விஜின்டிலியன் (quinvigintillion) ஆண்டுகளுக்கு பிறகு பிரபஞ்சம் முடிவடையும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 1க்கு பக்கத்தில் 70வது ஜீரோ போட்டால் கிடைக்கும் மதிப்பு தான் குவின்விஜின்டிலியன் . இந்த எண்ணிக்கை மிக பெரியதாக இருந்தாலும், முந்தைய கணிப்புகளை தற்போது வெளியான எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. இந்த புதிய ஆய்வு, கடந்த 1975 ஆம் ஆண்டு ஸ்டீபன் ஹாகிங் முன்மொழிந்த ஹாகிங் ரேடியேஷன் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகியுள்ளது.

அழிவை சந்திக்கும் பிளாக் ஹோல்

பிரபஞ்சத்தின் முடிவில்  பிளாக் ஹோல் மட்டுமல்லாது,  நியூட்ரான் ஸ்டார்ஸ் மற்றும் ஒயிட் டுவார்ஃப் ஸ்டார்ஸ் போன்றவை கூட அழிந்து போகும் என கூறப்படுகிறது. இவை முன்னதாக  இவை அனைத்தும் அழிவில்லாதவை என நம்பப்பட்டன, ஆனால் இப்போது அவையும் ஹாகிங் ரேடியேஷன் மூலம் மெதுவாக அழிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஆய்வு, பிளாக் ஹோல்களுக்கு மட்டுமே உட்பட்டிருந்த ஒரு கோட்பாட்டை, மற்ற வலுவான பொருள்களுக்கும் பொருந்தும் என்று முன்மொழிகிறது. இதனால், முன்பு சொன்னதை விட பிரபஞ்சத்தின் கால அளவு வெகுவாக குறைந்துள்ளது.

இந்த ஆய்வு, வானியல் ஆய்வாளர்கள் முந்தைய கருத்துக்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது. பிரபஞ்சத்தின் இறுதி கட்டம் எவ்வாறு ஏற்படும் என்பதை புதிய முறையில் விளக்குகிறது. இப்போது, நியூட்ரான் ஸ்டார்ஸ் மற்றும் ஒயிட் டுவார்ஃப் ஸ்டார்ஸ் ஆகியவை, பிரபஞ்சத்தின் இறுதியாக அழியும் என்று கூறப்படுகிறது.

மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு அழியும் பிரபஞ்சம்

இது, பிரபஞ்சத்தின் முடிவுக்கு வரும் காலம் உடனடியாக இருக்காது., மில்லியன் மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இருக்கும் என்று காட்டுகிறது. இருப்பினும், இந்த புதிய அறிவியல் கண்டுபிடிப்பு, நமக்கு பிரபஞ்சத்தின் நீண்டகால பயணத்தை புரிந்துகொள்ளும் புதிய வழியை உருவாக்குகிறது. இந்த ஆராய்ச்சி, பிரபஞ்சத்தின் இறுதி நிலையை சிந்திக்கும் புதிய புரிதலை உருவாக்குகிறது மற்றும் விண்வெளியின் மாறுபட்ட கோட்பாடுகளை ஆராய்ச்சி செய்ய உதவுகிறது.

இந்த ஆய்வானது, ஹாகிங் ரேடியேஷன் பற்றிய கருத்துகளை மேலும் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் பிரபஞ்சம் எப்படி மாறும் என்பதை மற்றுமொரு கோணத்தில் புரிந்துகொள்வதற்கான பார்வையை வழங்குகிறது.

இந்த அறிவியல் செய்தி, நம்மை பயமுறுத்துவதற்கானது அல்ல. பிரபஞ்சத்தின் கடைசி கட்டம் பற்றிய ஒரு ஆழமான புரிதலை இந்த ஆய்வு நமக்கு அளிக்கும். ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு அப்பால் நடைபெறக்கூடிய இந்த நிகழ்வு பற்றி இப்போது கவலைப் பட தேவையில்லை.  மேலும் பிரபஞ்சத்தின் ஆயுளை ஒப்பிடுகையில் நாமும் வாழும் காலத்தை ஒப்பிட்டுப்பார்த்தால் அது மிக மிக சிறியது. எனவே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் வாழ வேண்டும்.