‘உருட்டுகளும்.. திருட்டுகளும்’ அதிமுகவின் புதிய பிரச்சாரம் தொடக்கம்

Jul 25, 2025 | 7:10 PM

Edappadi Palanisamy : உருட்டுகளும், திருட்டுகளும் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய பிரச்சார முன்னெடுப்பை தொடங்கி வைத்தார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முன்னெடுப்பின் ஒருபகுதியாக எடப்பாடி பழனிசாமி இந்த பிரச்சார திட்டத்தை தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் திமுகவின் உருட்டுகளும், திருட்களும் , உண்மைக்காக உரிமைக்காக என்ற அதிமுகவின் புதிய பிரச்சார திட்டத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம், கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலையை அறிய, மக்களுக்கு வீடு வீடாக சென்று ரிப்போர்ட் விநியோகம் செய்ய உள்ளதாகவும், அதற்கு மக்கள் மதிப்பெண் கொடுக்கலாம் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.நு