மயிலை திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எம்.பி கனிமொழி..
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாடு முன்னேற்றமான மாநிலமாக மாறியதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்றும், அடுத்த முறையும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தற்போது வழங்கப்படும் ₹1000 மகளிர் உரிமைத் தொகை ₹2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு, திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us