மதவெறி பாஜகவை வீழ்த்துவது மட்டுமே ஒற்றை இலக்கு – சிபிஐஎம் மாநில செயலாளர் சண்முகம்..
மாநில செயலாளர் சண்முகம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது: “இந்த தொகுதிகளில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. ஆனாலும், மதவெறி அரசியலை முன்னெடுத்து வரும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் இதனை ஏற்றுக்கொண்டுள்ளோம். திமுக கூட்டணி அபார வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது: “இந்த தொகுதிகளில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. ஆனாலும், மதவெறி அரசியலை முன்னெடுத்து வரும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் இதனை ஏற்றுக்கொண்டுள்ளோம். திமுக கூட்டணி அபார வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்தார். பல நாட்களாக இழுபறியில் இருந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வந்துள்ளன. திமுக வழங்கியுள்ள 5 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டு, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
Follow Us