Viral Video : 5 மணிக்கு மேல் அலுவலகங்கள் இப்படிதான் இருக்கும்.. ஐரோப்பாவின் வேலை கலாச்சாரம் குறித்து வீடியோ பதிவிட்ட பெண்!

Europe Work Culture Video Goes Viral on Internet | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த நிலையில், இளம் பெண் ஒருவர் ஐரோப்பாவின் வேலை கலாச்சாரம் குறித்து பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : 5 மணிக்கு மேல் அலுவலகங்கள் இப்படிதான் இருக்கும்.. ஐரோப்பாவின் வேலை கலாச்சாரம் குறித்து வீடியோ பதிவிட்ட பெண்!

வைரல் வீடியோ

Updated On: 

02 Oct 2025 23:34 PM

 IST

இணையதளங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்த ஒட்டுமொத்த உலகமும் உள்ளங்கைகளில் அடங்கி விடுகின்றன. ஸ்மார்ட்போன்களின் உதவியால் உலகம் முழுவதிலும் எந்த பகுதிகளில் வியக்கத்தக்க மற்றும் ஆச்சர்யமூட்டும் சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஐரோப்பாவின் வேலை கலாச்சாரத்தை குறித்து இந்திய பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐரோப்பாவின் வேலை கலாச்சாரம் குறித்து வீடியோ பதிவிட்ட பெண்

இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் இருந்து அதிகப்படியான வேலைகளை வாங்குகின்றனர். பணி தொடங்கும் நேரம், முடியும் நேரம் என கணக்கிடாமல் அன்றைய நாளுக்கான வேலைகள் முடித்தால் மட்டுமே அலுவலகத்தில் இருந்து செல்ல வேண்டும் என்பதை போன்ற விதிகளை பின்பற்றுகின்றன. இதன் காரணமாக  ஏராளமான தனியார் துறை ஊழியர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் தான் இந்திய பெண் வெளியிட்டுள்ள ஐரோப்பிய வேலை கலாச்சாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : 7 வயது மகனை தண்ணீரில் தள்ளிட்ட இன்ஃப்ளூயன்சர்.. விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ