Viral Video : உராங்குட்டானை புகை பிடிக்க வைத்த இளம் பெண்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

Woman Makes Orangutan Smoke | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் உராங்குட்டானுக்கு சிகிரெட் புகைக்க கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : உராங்குட்டானை புகை பிடிக்க வைத்த இளம் பெண்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

04 Jul 2025 21:46 PM

உயிரியல் பூங்காக்களில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில், உயிரியல் பூங்காவில் பெண் ஒருவர் உராங்குட்டானை சிகிரெட் பிடிக்க வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உராங்குட்டானை துன்புறுத்தும் வகையில் நடந்துக்கொண்ட அந்த பெண்ணுக்கு கடும் கண்டங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உராங்குட்டானை சிகிரெட் பிடிக்க வைத்த பெண்

உயிரியல் பூங்காக்களில் இருக்கும் விலங்குகளை எந்த வகையில் துன்புறுத்த கூடாது. விலங்குகள் உயிரியல் பூங்காக்களில் பாதுகாக்கப்படுவதால் அவற்றை தொந்தரவு செய்யும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாக நடந்துக்கொள்ள கூடாது. இன்னும் சில பூங்காக்களில் விலங்குகளுக்கு உணவு பொருட்களை கூட வழங்க கூடாது என பூங்கா நிர்வாகம் தடை விதித்திருக்கும். காரணம், உணவுகளுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படும் என்பதால் அதற்கும் அனுமதி மறுக்கப்படும். இந்த நிலையில், உயிரியல் பூங்காவில் பெண் ஒருவர் உராங்குட்டானுக்கு சிகிரெட் பிடிக்க கொடுக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் கூண்டுக்குள் இருக்கும் உராங்குட்டானுக்கு சிகிரெட் பிடிக்க கொடுக்கிறார். ரஷ்யாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரரான அந்த பெண், இந்த செயலில் ஈடுபடுகிறார். ஒருமுறை உராங்குட்டானுக்கு சிகிரெட் பிடிக்க கொடுக்கும் அவர், பிறகு தானும் அதே சிகிரெட்டில் புகைக்கிறார். இவவாறு மூன்றுக்கும் மேற்பட்ட முறை உராங்குட்டானுக்கு புகைக்க கொடுத்துவிட்டு தானும் புகைக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உராங்குட்டானிடம் இத்தகைய மோசமான செயலில் ஈடுபட்ட அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.