Viral Video : என்ன Confidence.. வகுப்பறையில் ரேம்ப் வாக் செய்து அசத்திய சிறுவர்கள்.. வைரல் வீடியோ!
Schoolkids Ramp Walk Skills Amaze Internet | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பள்ளி மாணவர்கள் சிலர் வகுப்பறையில் ரேம்ப் வாக் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

வைரல் வீடியோ
மாடலிங் (Modeling) செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முக்கிய தகுதி என்றால் அது ரேம்ப் வாக் (Ramp Walk) தான். ஒருவர் எவ்வளவு சிறப்பாக ரேம்ப் வாக் செய்கிறாரோ, அந்த அளவுக்கு அந்த நபர் மாடலிங்கில் சிறப்பு வாய்ந்த நபராக கருதப்படுவார். அவ்வாறு ஒருவர் சிறந்த மாடலாக வரவேண்டும் என்றால், அதற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். ஆனால், இணையத்தில் பள்ளி மாணவர்கள், மாடல்களை போல ரேம்ப் வாக் நடந்துக்காட்டும் வீடியோ வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வகுப்பறையில் ரேம்ப் வாக் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்
பள்ளியில் கல்வியை மற்றும் கூடுதல் அறிவையும் வழங்கும் வகையில் சில சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு ரேம்ப் வாக் போட்டி நடத்தியுள்ளார். பொதுவாக மாடலிங்கில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் ரேம்ப் வாக் மிகவும் முக்கியமாக உள்ளது. மாடலிங் செய்யும் நபருக்கு முக தோற்றம், உடல் அசைவுகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ரேம்ப் வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இத்தகைய சூழலில் ஆசிரியர் நடத்திய அந்த போட்டியில் மாணவர்கள் மிக சிறப்பாக நடந்த நிலையில், அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் மாணவர்களின் அசத்தலான ரேம்ப் வாக்
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வகுப்பறை ஒன்றில் மாணவர்களுக்கு ரேம்ப் வாக் போட்டி நடைபெறுகிறது. அதில் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கேற்கின்றனர். அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களை போல மிக அருமையாக ரேம்ப் வாக் செய்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நெட்டிசன்கள் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த இளம் வயதில் நான் எதுவும் தெரியாத குழந்தையாக இருந்தேன். ஆனால், இந்த சிறுவர்கள் மிகவும் தைரியமாகவும், தன்நம்பிக்கையுடனும் இருக்கின்றனர் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த ரேம்ப் வாக் மூலம் அந்த ஆசிரியர் மாணவர்களிடையே மகிழ்ச்சியை மட்டுமன்றி அவர்களது தன்நம்பிக்கையையும் வெளியே கொண்டு வந்துள்ளார் என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.