Viral Video : பட்டு உடையுடன் ஓணம் கொண்டாடிய நாய் குட்டி.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

Dog Celebrates Onam | இன்று (செப்டம்பர் 05, 2025) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் பலரும் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாய் ஒன்று பட்டு உடை அணிந்து ஓணம் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : பட்டு உடையுடன் ஓணம் கொண்டாடிய நாய் குட்டி.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

05 Sep 2025 23:22 PM

 IST

கேரளாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் இன்று (செப்டம்பர் 05, 2025) கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமன்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓணம் கொண்டாடும் நபர்கள் பலரும் அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தங்களது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன வீடியோ, அதில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பட்டு உடையுடன் ஓணம் கொண்டாடிய வளர்ப்பு நாய்

கேராளாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகை தான் ஓணம். இந்த பண்டிகையின் போது பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பூக்கோலமிட்டு, பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து சாப்பிடுவர். இது மிகவும் மகிழ்ச்சியான பண்டிகையாக உள்ளதால் பலரும் இதனை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவர். இது இத்தகைய பல சிறப்புகளை கொண்டுள்ள நிலையில், இந்த பண்டிகையில் எடுக்கும் புகைப்படங்களை பலர் தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து மகிழ்வர். அந்த வகையில் வளர்ப்பு நாய் ஒன்று பட்டு உடை உடுத்தி ஓணம் பண்டிகையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : வானை பிளந்துக்கொண்டு பயங்கர சத்ததுடன் தாக்கிய மின்னல்.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய இளைஞர்கள்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பாரம்பரிய உடை அணிந்து, ஓணத்திற்கு பரிமாறப்படும் பாரம்பரிய உணவை சாப்பிடுகிறார். அவருக்கு அருகில் வளர்ப்பு நாய் ஒன்று அமர்ந்துக்கொண்டு இருக்கிறது. அந்த வளர்ப்பு நாயும் தனது உரிமையாளரை போலவே பாரம்பரிய பட்டு உடை அணிந்து இலையில் வைக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : Drone மூலம் டெலிவரி செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்.. அசத்திய வால்மார்ட்.. ஆச்சர்யத்தில் வாடிக்கையாளர்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிச்னகள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், ஓணம் பண்டிகையின் வெற்றியாளர் இந்த நாய் குட்டி தான் என்று பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.