Viral Video: நாகப்பாம்புடன் விளையாடிய இளைஞர்… முகத்தில் விஷத்தை தெளித்த பாம்பு

Snake Spits Venom on Influencer's Face : இந்தோனேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் சஹாபத் ஆலம் தனது கையில் விஷமுள்ள நாகப்பாம்பை வைத்துக்கொண்டு விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. எதிர்பாராத தருணத்தில் பாம்பு அவரது கண்மேல் விஷத்தை தெளிக்க, அவர் அணிந்திருந்த சன் கிளாஸ் உயிரை காப்பாற்றியது.

Viral Video: நாகப்பாம்புடன் விளையாடிய இளைஞர்... முகத்தில் விஷத்தை தெளித்த பாம்பு

பாம்புடன் விளையாடும் இளைஞர்

Published: 

02 Jul 2025 22:13 PM

இந்தோனேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரான சஹாபத் ஆலம் கையில் நாகப்பாம்பை வைத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சஹாபத் ஆலம் தன் கையில் நாகப்பாம்பை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் பாம்பு அவரது கண்ணில் பற்களை வைத்து விஷத்தை தெளிக்கிறது. ஆனால் அவர் கண்களில் சன் கிளாஸ் அணிந்திருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது வைரலாகும் அந்த வீடியோவில் சஹாபத்  தனது கைகளில் மிகவும் விஷமுள்ள பாம்பை வைத்திருக்கும் நிலையில் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனை அவர் தனது  ஆபத்தான நாகப்பாம்பு அதன் கூர்மையான பற்களைப் பயன்படுத்தி சஹாபத்தின் முகத்தில் விஷத்தை வெளியிடும் அதிர்ச்சியூட்டும் தருணம் கேமராவில் பதிவாகியுள்ளது.

விஷம் அவர் முகத்தில் பட்டவுடன், அவர் கடுமையான வலி மற்றும் கடுமையான எரிச்சலையும் உணர்கிறார். வைரலான இந்த வீடியோவில், சஹாபத் பயத்திலும் வலியாலும் பின்வாங்குவதைக் காண முடிகிறது. இது அவர் நேரத்தில் கடுமையான வலியை உணர்ந்திருப்பார் என்பதைக் காட்டுகிறது.  இதைப் பார்த்து நெட்டிசன்கள் திகைத்துப் போனார்கள். இருப்பினும் இது இன்ஸ்டாகிராமிற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது. இவர் இது போன்ற வீடியோக்களுக்கு புகழ்பெற்றவராக அறியப்படுகிறார். இவருக்கு என தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

கையில் பாம்புடன் இருக்கும் இளைஞரின் வீடியோ வைரல்

 

சில வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ கிளிப் @sahabatalamreal என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டிருக்கிறது. தற்போது இது உலக அளவில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த தற்போது வரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பதிவை லைக் செய்துள்ளனர், அதே நேரத்தில் கமெண்ட் பகுதியில் மக்கள் ஆச்சரியத்துடன் தங்கள் எதிர்வினைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர், அந்த நபர் முற்றிலும் பாதுகாப்பானவர். அவரது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பார்க்கும்போது, ​​அவர் இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குவதற்குப் பெயர் பெற்றவர் என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  மற்றொருவர் இந்த வீடியோவைப் பார்க்கும்போது என் உயிர் நடுங்கியது என பதிவிட்டுள்ளார். இன்னொருத்தர், “தம்பி வாழ்க்கை மேல ஆசை இல்லையா? ஏன் இப்படி மரணத்தோடு விளையாடுகிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தோனேஷியா தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தீவுத் தொடர்களில் ஒன்றாகும். 17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்த நாடு, வனவிலங்குகள் மற்றும் வெவ்வேறு உயிரினங்களுக்குப் புகழ்பெற்றதொரு பைோடைவெர்சிட்டி ஹாட்ஸ்பாட் ஆகும். இந்தோனேஷியாவில் உள்ள காடுகள், நதிகள், ஈரநிலங்கள் போன்ற சூழ்நிலைகள் பாம்புகள் வாழ்வதற்கு மிகவும் ஏற்றவை. வனப்பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் கூட பாம்புகள் சகஜமாக காணப்படுகின்றன.