காணாமல் போன நிலையில், மீண்டும் தாயுடன் இணைந்த குட்டி யானை.. இணையத்தில் வைரலாகும் பாச போராட்ட வீடியோ!

Baby Elephant Reunites With Mother Elephant | மனிதர்கள் தங்களது பரபரப்பான வாழ்க்கை சூழலில் தங்களது உறவுகளை பார்த்து பேச கூட நேரம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில், குட்டி யானை ஒன்று தாயை விட்டு பிரிந்த நிலையில், மீண்டும் தாயுடன் இணையும் பாச போராட்டமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காணாமல் போன நிலையில், மீண்டும் தாயுடன் இணைந்த குட்டி யானை.. இணையத்தில் வைரலாகும் பாச போராட்ட வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

12 Jul 2025 21:30 PM

மனிதர்களின் வாழ்க்கை மிகவும் வேகமானதாக மாறிவிட்டது. காலையில் எழுவது முதல் இரவு தூங்க செல்வது வரை எதையோ தேடி அவர்கள் அலைந்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பரபரப்பான வாழ்கை சூழலில் அவர்களால் தங்களது அன்புக்குறியவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போய்விடுகிறது. தங்களது உறவுகளையே எப்போதாவது ஒருமுறை பார்க்க கூடிய சூழலில் கூட பலர் வாழ்த்துக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு மனிதர்கள் உறவுகளையும், அன்பையும் தொலைத்துவிட்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கும் சூழலில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று, மீண்டும் தாயுடன் இணையும் பாச போராட்டமான ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்க்கும் பலரும், அதனை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொலைந்துப்போன குட்டி யானை – மீண்டும் தாயுடன் இணைந்தது

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில சிரிக்கவைக்கும் விதமாகவும், சில சிந்திக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், காணாமல் போன குட்டி யானை தனது தாயுடன் மீண்டும் இணையும் வீடியோ வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. தாயை பிரிந்த பரிதவிப்பையும், மீண்டும் இணைந்த மகிழ்ச்சியையும் அந்த வீடியோ வெளிப்படுத்துவதால் அது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

இணையத்தில் வைரலாகும் குட்டி யானையின் பாச போராட்ட வீடியோ

சோட்டு என்று அழைக்கப்படும் அந்த குட்டி யானை தனது தாயிடம் இருந்து காணாமல் போயுள்ளது. இந்த நிலையில், குட்டி யானையை மீண்டும் அதன் தாயுடன் இணைக்கும் முயற்சியில் இறங்கி வனத்துறை அதிகாரிகள், தாய் யானையின் சானத்தை குட்டி யானையின் மீது பூசியுள்ளனர். காரணம், தாயை பிரிந்த அந்த குட்டி யானை வனத்துறை அதிகாரிகளுடன் இருந்த நிலையில், மனித வாசம் பட்டால் தாய் யானை மீண்டும் அதன் குட்டியை ஏற்றுக்கொள்ளாது. இதன் காரணமாக அவர்கள் அந்த செயலை செய்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : உராங்குட்டானை புகை பிடிக்க வைத்த இளம் பெண்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

பின்னர் ஒரு வழியாக வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் குட்டி யானை மீண்டும் தனது தாயுடன் இணைந்துள்ளது. அப்போது அந்த குட்டி யானையும், தாய் யானையும் மிகுந்த மகிழ்ச்சியில் நடந்துச் செல்லும் வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.