Viral Video : நாங்கள் என்ன நாயா?.. SpiceJet விமானத்தில் கெட்டுப்போன உணவு கொடுத்ததாக பயணிகள் வாக்குவாதம்!

Passengers Confront Crew Over Spoiled Food | ஸ்பைஸ் ஜெட் விமானம் தாமதமானதன் காரணமாக தங்களுக்கு கெட்டுப்போன உணவு கொடுத்ததாக பயணிகள் விமான ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Viral Video : நாங்கள் என்ன நாயா?.. SpiceJet விமானத்தில் கெட்டுப்போன உணவு கொடுத்ததாக பயணிகள் வாக்குவாதம்!

வைரல் வீடியோ

Published: 

18 Jun 2025 17:16 PM

விமானங்கள் தாமதமாக வருவது வழக்கமான ஒன்றுதான். வானிலை, விமான சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த தாமதம் ஏற்படால். இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) விமானம் வருவதற்கு தாமதமான நிலையில், ஆத்திரமடைந்த பயணிகள் கெட்டுப்போன உணவை கொடுத்ததாக கூறி விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், சிலர் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தாமதமான விமானம்  – கெட்டுப்போன உணவை கொடுத்ததாக  பயணிகள் ஆத்திரம்

விமானங்கள் வானத்தில் பறப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு விமானம் புறப்படுவதற்கும் முன்பாக விமானத்தின் பாதுகாப்பு, வானிலை உள்ளிட்டவற்றை நன்கு ஆராய்ந்த பிறகு தான் அதற்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமானம் தாமதமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் கெட்டுப்போன உணவை விமான ஊழியர்களை சாப்பிட கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் விமான பயணிகள் சிலர், விமான உழியரை சுற்றி அமர்ந்துக்கொண்டு தங்களுக்கு கெட்டுப்போன உணவு கொடுக்கப்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது எங்களை பார்த்தால் நாய் மாதிரி உள்ளதா, கெட்டுப்போன உணவுகளை சாப்பிட என ஒருவர் கேட்கிறார். மேலும் அவர் அந்த உணவை தங்களது கண் முன்பே சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்.

அனைவரும் வற்புறுத்தியன் காரணமாக அந்த விமான ஊழியர் உணவை சாப்பிட்டு பார்த்துவிட்டு அது நன்றாக தான் உள்ளது என கூறுகிறார். அதனை கேட்டு சிலர் ஆத்திரமடைகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து கூறியுள்ள ஸ்பைஸ் ஜெட், பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல தரத்தில் இருந்தது. அறிமுகம் இல்லாத உணவகத்தில் இருந்து விமான நிலையம் மற்றும் விமாங்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக கூறியுள்ளது. அதுமட்டுமன்றி, தங்களது ஊழியர்களை பயணிகள் ஆபாசமாக பேசிய நிலையிலும் அவர்கள் மிகவும் பொறுமையாக இருந்துள்ளனர். நாங்கள் எங்கள் ஊழியர்களுடன் நிற்கிறோம் என்றும் கூறியுள்ளது.