Viral Video : கடைக்காரர் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி.. வைரல் வீடியோ!
Shop Owner Throw Waste Cover | வெளிநாடுகளி இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், கடைக்காரர் ஒருவர் ஐஸ் கிரீம் கவரை தரையில் வீசியதை பார்த்து வெளிநாட்டு சுற்றுலா பயணி அதிர்ச்சி அடையும் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீட்யோ
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் தங்களுக்கு நடைபெறும் அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் தனது அனுபவத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்ட வீடியோ
இந்தியாவின் கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றின் ஈர்ப்பு கொண்டு பல்வேறு வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவுக்கு வரும் அவர்கள் இந்தியாவை முழுவதுமாக தெரிந்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்வர். இந்திய பயணத்தின் மூலம் தங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வர். அந்த வகையில், அந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி வெளியிட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : புலிக்கு மது கொடுத்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. உண்மையா?
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் ஒரு கடையில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடுகிறார். பிறகு அந்த ஐஸ் கிரீம் கவரை போட குப்பை தொட்டியை தேடுகிறார். ஆனால், அங்கு குப்பை தொட்டி இல்லாததால் கடையின் உரிமையாளரிடம் கேட்கிறார். அவர் அந்த கவரை வாங்கி கடையின் வாசலில் போட்டுவிடுகிறார். அதனை பார்த்த அந்த சுற்றுலா பயணி கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்.
இதையும் படிங்க : Viral Video : சான் பிரான்சிஸ்கோ வானில் பறந்த ராட்சத வெள்ளை விமானம்.. குழம்பிய மக்கள்!
பல உலக நாடுகளில் பொது இடங்களை அசுத்தம் செய்யும் வகையில் குப்பைகளை போடுவது தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் குப்பை போடுவதை தவிர்த்து விடுவர். அத்தகைய கட்டுப்பாட்டை பின்பற்றிய அந்த பெண்ணுக்கு அந்த கடைக்காரர் செய்த செயல் அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.