Viral Video : கழுத்து வரை கரை புரண்டு ஓடிய வெள்ளம்.. மூழ்கும் நிலையில் நேரலை செய்த செய்தியாளர்.. வைரல் வீடியோ!

Pakistan Journalist's Live Report in Flood | இணையத்தில் சில வீடியோக்கள் வெளியாகி நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில் பாகிஸ்தானில் ஒரு பத்திரிக்கையாளர் கழுத்தளவு வெள்ளத்தில் நின்றுக்கொண்டு நேரலை செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : கழுத்து வரை கரை புரண்டு ஓடிய வெள்ளம்.. மூழ்கும் நிலையில் நேரலை செய்த செய்தியாளர்.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

19 Jul 2025 19:36 PM

உலகில் நடக்கும் முக்கியமான விஷயங்களை உலகிற்கு தெரிவிக்க வேண்டியது தான் செய்தியாளர்களின் முதன்மை பொறுப்பாக உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்கள் சில கடினமான சூழல்களையும் தாண்டி பணி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மழை, வெயில், புயல் என எதையும் பார்க்காமல் உரிய நேரத்தில் மக்களுக்கு தகவலை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக செய்தியாளர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கழுத்துவரை கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் நின்றுக்கொண்டு நேரலை செய்யும் வீடியோ வெளியாகி சமூக வளைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

கழுத்துவரை கரை புரண்டு ஓடும் வெள்ளம் – நேரலை செய்த செய்தியாளர்

செய்தியாளர்கள் ஆபத்தான சூழல்களில் பணியாற்றுவது, செய்தியாளர்கள் நேரலையில் இருக்கும்போது பொதுமக்கள் அவர்களை தொந்தரவு செய்வது, நேரலையின் போது நடைபெறும் சில சுவாரஸ்ய சம்பவங்களின் பல வகையான சுவாரஸ்யமான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கழுத்தளவு கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் நின்றுக்கொண்டு நேரலை செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : நீர்வீழ்ச்சியின் விளிம்பில் உயிருக்கு போராடிய நபர்.. கையிறு கொண்டு காப்பாற்றிய பொதுமக்கள்.. பகீர் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் செய்தியாளரின் வீடியோ

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் மட்டும் 54 பேர் மழையால் உயிரிழந்ததாக ஜூலை 17, 2025 அன்று அறிவிப்பு வெளியானது. இவ்வாறு கனமழை காரணமாக பாகிஸ்தான் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானில் இவ்வளவு கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல ஓடுகிறது. இந்த நிலையில், வெள்ளம் ஏற்பட்ட பகுதியை நேரலை செய்ய சென்ற செய்தியாளரின் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

செய்தியாளரின் இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். செய்தியாளர்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்று ஏராளமானவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.