Viral Video : Porsche-ல் மின்னல் வேகத்தில் பறந்த தாய்.. ஆச்சரியத்தில் வாயடைத்து போன மகன்!

Mom beats son with Porsche | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தாய் ஒருவர் தனது மகனை போர்ஷே காரில் வேகமாக முந்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : Porsche-ல் மின்னல் வேகத்தில் பறந்த தாய்.. ஆச்சரியத்தில் வாயடைத்து போன மகன்!

வைரல் வீடியோ

Updated On: 

13 Sep 2025 07:37 AM

 IST

தாய் மற்றும் மகனுக்கு இடையேயான பாச உறவு குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மற்ற வீடியோக்களை போல தாய் மனகனுக்கு இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வீடியோவாக இல்லை. மாறாக  தாய் தனது மகனை எவ்வாறு கார் ரேசில் முந்திச் செல்கிறார் என்பதனை காட்டும் விதமாக உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் அப்படி என்ன இடம் பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகனை போர்ஷே காரில் முந்திச் சென்ற தாய்

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுப்பார்கள். இதுவே பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோருக்கு காரோ அல்லது பைக் ஓட்ட கற்றுக்கொடுப்பார்கள். இது வாழ்க்கையின் மிக அழகான ஒரு கால சக்கரமாக கருதப்படுகிறது. இவ்வாறு பிள்ளைகள் தங்களது பெற்றோர்களுக்கு கற்று கொடுப்பது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். ஆனால், இந்த வீடியோ முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. அதாவது அந்த வீடியோவில் ஒரு தாய் அவரது மகனை விட மிக வேகமாக கார் ஓட்டிச் செல்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மகனின் அமெரிக்க காதலி.. மலர் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜம்மு & காஷ்மீர் குடும்பம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் வெள்ளை நிர ஃபார்சுனர் கார் ஒன்று செல்கிறது. அந்த காரை முந்தி மிக வேகமாக சிவப்பு நிர போர்ஷே கார் ஒன்று செல்கிறது. அது குறித்து பதிவிட்டுள்ள நபர் தனது அம்மாவின் அசாத்திய கார் ஓட்டும் திறமை குறித்து பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் திருடி மாட்டிக்கொண்ட இந்திய பெண் – வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமக வைரலாகி வரும் நிலையில், இளைஞரின் தாயின் திறமை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.