இந்திய தெருக்களை சுத்தப்படுத்தும் ஸ்வீடன் நாட்டு இளைஞர்: வைரல் வீடியோ

Mission Clean India: ஸ்வீடன் நாட்டு இளைஞர் ஒருவர் இந்திய தெருக்களை சுத்தப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிளீன் இந்தியா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் அவர் இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்திய தெருக்களை சுத்தப்படுத்தும் ஸ்வீடன் நாட்டு இளைஞர்: வைரல் வீடியோ

இந்திய தெருக்களை சுத்தப்படுத்தும் ஸ்வீடன் இளைஞர்

Published: 

12 Aug 2025 21:37 PM

இந்தியாவின் தெருக்களை சுத்தமாக்கும் பணியில் ஸ்வீடன் (Sweden) நாட்டு இளைஞர் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரின் முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஸ்வீடன் நாட்டு இளைஞர் ஒருவர் 4cleanindia என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தை துவங்கியிருக்கிறார். அந்த பக்கத்தில் அவர் தினமும் சுத்தம் செய்யும் தெருக்கள், பூங்கா போன்ற இடங்களின் வீடியோக்களை பதிவேற்றி வருகிறரார். எளிய வழிகளில் சுத்தமாக வைத்திருக்கலாம் என்று அவர் தனது வீடியோக்கள் மூலம் மக்களுக்கு உணர்த்தி வருகிறார்.

இந்திய தெருக்களை தூய்மைப்படுத்தும் ஸ்வீடன் நாட்டு இளைஞர்

இன்ஸ்டாகிராமில் இவரின் இந்த முயற்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் பழக்கங்களை இனி தங்களும் பின்பற்றுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு நாள் ஒரு தெரு என்ற சீரிஸை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துவங்கிய அவர், தினிமும் ஒரு தெருவை தேர்ந்தெடுத்து, அங்கு குப்பைகளை சுத்தம் செய்து வீடியோவாக பதிவேற்று வருகிறார். இந்திய இளைஞர்களே தயங்கும் ஒரு வேலையை ஸ்வீடன் நாட்டு இளைஞர் செய்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : சிங்கத்துடன் போட்டோ எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி – வைரலாகும் வீடியோ

வைரலாகும் ஸ்வீடன் நாட்டு இளைஞரின் வீடியோ

 

இப்படி அவர் சுத்தம் செய்யும் போது, அவர் பார்க்கும் மனிதர்களிடம் சென்று இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஒரு வீடியோவில் இவர் நடைபயிற்சி செய்யும்போது ஒரு பையில் குப்பைகளை சேகரிக்கிறார். பின்னர் அதனை ஒரு மூட்டையாகக் கட்டி அதை குப்பைத் தொட்டியில் போடுகிறார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய அவர், இனி நீங்களும் நடைபயிற்சி செய்யும்போது நீங்களும் ஒரு பை எடுத்துச் செல்லுங்கள். வழியில் பார்க்கும் குப்பைகளை சேகரித்து குப்பைத் தொட்டியில் போடுங்கள். இது உங்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : வாக்கிங் சென்ற இளம்பெண்.. பாய்ந்து வந்து கடித்த ஹஸ்கி நாய்.. அதிர்ச்சி வீடியோ!

அவர் தனது வீடியோக்களில்  நீங்கள் காண விரும்பும் இந்தியாவை நாம் இணைந்து உருவாக்குவோம் என்ற வாசகத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  இந்த ஸ்வீடன் நாட்டு இளைஞரின் முயற்சி, பொது இடங்களில் தூய்மை மற்றும் கழிவுப் பொருள் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.  பலரும் கூட்டத்தால் மட்டுமல்ல, தனி நபர் நினைத்தால் கூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இந்த இளைஞர் உணர்த்துவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.