Viral Video : வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Man Sets Pants Ablaze for Viral Music Video | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனது பேன்டில் தானே தீ வைத்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

வைரல் வீடியோ

Updated On: 

06 May 2025 00:04 AM

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதாவது, மிகவும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகும். இத்தகைய சம்பவங்கள் இயல்பாக நடைபெறுவது உண்டு. ஆனால், சிலர் தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும், பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளை செய்கின்றனர். குறிப்பாக வீடியோக்களை பிரம்மாண்டமாக எடிட் செய்வது, பாடல்களை சேர்ப்பது, சாகசங்களில் ஈடுபடுவது, அசாத்திய செயல்களை செய்வது உள்ளிட்ட செயல்களை செய்கின்றனர்.

வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர்

அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது பாடல் ஏராளமான மக்களை சென்று சேர வேண்டும் என்பதற்காக ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார். அவர் தனது வீடியோ வைரலாக வேண்டும் என்றால் தனது பேன்டில் நெருப்பு பற்றி எரிவதை போல  எடிட் செய்ய விரும்பியுள்ளார். ஆனால், அதற்கு அதிக பணம் செலவாகும் என்பதால் அவர் உண்மையாகவே தனது பேன்டில் தீ வைத்து வீடியோ எடுத்துள்ளார். ஆனால், மெது மெதுவாக தீ பேன்ட் முழுவதும் பற்றி எரிய தொடங்கிய நிலையில் பதறிப்போன அந்த நபரை தனது பேன்டை கழட்டி எறிகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த இளைஞர் செய்ததை விட முட்டால் தனம் வேறு எதுவும் இல்லை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். வீடியோக்கள் வைரலாக வேண்டும், அதிக லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இத்தகைய பாடம் கட்டாயம் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு, பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories
Viral Video: நாகப்பாம்புடன் விளையாடிய இளைஞர்… முகத்தில் விஷத்தை தெளித்த பாம்பு
பள்ளியில் இருந்து தப்பி ஓடிய சிறுவன்.. விரட்டி சென்று பிடித்த ஆசிரியை.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
Viral Video : அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்.. வைரல் வீடியோ!
Viral Video : இப்படி ஒரு Subway இருந்தால் யாருக்கும் கடந்து செல்லவே மனசு வராது.. வியக்கவைக்கும் வீடியோ!
Viral Video : ஆபத்தான முறையில் காரில் Stunt செய்த இளைஞர்கள்.. இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ!
Ahmedabad Elephant Abuse: அகமதாபாத்தில் அதிர்ச்சி! பெண் யானையை குச்சியால் கொடூரமாக தாக்கும் பாகன்.. வைரலான வீடியோவால் பரபரப்பு!