Viral Video : தாயால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் குட்டி குரங்கு.. இணையத்தை துயரத்தில் ஆழ்த்திய வீடியோ!

Little Monkey Roaming With Orange Sloth Doll | ஜப்பானில் தாயால் புறக்கணிக்கப்பட்ட குட்டி குரங்கு ஒன்று ஆரஞ்சு நிற பொம்மையை தனக்கு ஆதரவாக செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : தாயால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் குட்டி குரங்கு.. இணையத்தை துயரத்தில் ஆழ்த்திய வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

21 Feb 2026 15:44 PM

 IST

2026, ஜனவரி மாதத்தில் பென்குயினின் வீடியோ ஒன்று இணையத்தில் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் தற்போது குரங்கு குட்டி ஒன்றின் வீடியோக்கள் தான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. இணையத்தின் அனைத்து பக்கத்திலும் இந்த குரங்கு குட்டியின் வீடியோ தான் உள்ளது. அப்படி அந்த குரங்கு குட்டி என்ன செய்துவிட்டது, ஏன் அதன் வீடியோ இணையத்தில் பேசுபொருளாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் பேசுபொருளாக மாறிய குரங்கு குட்டி

ஜப்பானை (Japan) சேர்ந்த மக்காவ் இன குரங்கு குட்டி தான் அது. அதன் பெயர் பஞ்ச். இந்த குரங்கு குட்டி ஆரஞ்சு நிற தேவாங்கு பொம்மையை தான் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வீடியோ மூலம் தான் வைரலாக தொடங்கியது. இந்த குரங்கு குட்டி அந்த பொம்மையை தன்னுடனேயே வைத்திருப்பதற்கு பின்னால் உள்ள கதை தான் இந்த குரங்கு குட்டி மீது பலருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : திருமண நிகழ்ச்சியில் மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை.. வைரல் வீடியோ!

தாயால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் குட்டி குரங்கு

இந்த குட்டி குரங்கு 2025 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள இச்சிகாவா வன உயிரியல் பூங்காவில் பிறந்துள்ளது. இந்த குரங்கை பெற்றெடுத்ததுமே அதன் தாய் அதனை தனிமைப்படுத்தியுள்ளது. இதனால், அந்த குரங்கு குட்டி தனது கூட்டத்தில் உள்ள மற்ற குரங்குகளிடம் அடைக்கலம் தேடியுள்ளது. ஆனால், அவையும் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்த ஆரஞ்சு நிற தேவாங்கு பொம்மையை அது தனது தோழனாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : வெறும் 5 பேருக்கு ஹோட்டல்.. 70 வயதிலும் அயராத உழைப்பு.. இணையத்தை திரும்பி பார்க்க வைத்த மூதாட்டி!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் அந்த குரங்கு குட்டி தனக்கு ஒரே ஆதரவான அந்த ஆரஞ்சு நிற பொம்மை மீது படுத்து தூங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. இவ்வாறு, அந்த குரங்கு குட்டி பொம்மையுடன் சுற்றித் திரியும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவை காண்போரை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

Related Stories
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!