Viral Video : சாலையோரம் சண்டை போடும் எலிகள்.. கைதட்டி உற்சாகப்படுத்தும் ஆண்கள்.. வைரல் வீடியோ!

Group of Men Cheering For Rat Fighting | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சாலையோரம் இரண்டு எலிகள் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை ஆண்கள் கைதட்டி உற்சாகப்படுத்தும் வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : சாலையோரம் சண்டை போடும் எலிகள்.. கைதட்டி உற்சாகப்படுத்தும் ஆண்கள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Published: 

01 Apr 2026 19:59 PM

 IST

சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அவ்வாறு நாள்தோறும் வைரலாகும் ஏராளமான வீடியோக்களில் சில வியப்பை ஏற்படுத்தும் விதமாகவும், சில மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், இரண்டு எலிகள் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை ஆண்கள் கூட்டம் கைதட்டி ரசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

எலி சண்டையை கை தட்டி ரசித்த ஆண்கள்

சமூக ஊடகங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவதை நாம் பார்த்திருப்போம். ஏதேனும் ஒரு இடத்தில் ஜேசிபி மண்ணை தோண்டுவது அல்லது புதர்களை அழிப்பது போன்ற பணிகள் நடைபெறும்போது அங்கு சில ஆண்கள் கூட்டமாக நின்றுக்கொண்டு அதனை வேடிக்கை பார்ப்பது போன்ற வீடியோக்கள். அத்தகைய வீடியோக்களில் ஒன்றுதான் “ஆண்கள் எப்போதுமே ஆண்கள் தான்” என்று குறிப்பிடப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பணி முடிந்து வீடு திரும்பும் தந்தையை உற்சாக நடனமாடி வரவேற்ற மகன்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு குப்பை தொட்டியின் அருகே இரண்டு எலிகள் சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றன. அவை சண்டை போடுவதை சாலைமீது நின்றுக்கொண்டு பல ஆண்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எலிகளின் சண்டையை உற்சாகப்படுத்துவதை போல கைத்தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்துக்கொண்டு இருக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : Gen Z இளம் பெண்களுடன் நடனமாடிய செக்யூரிட்டி.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், Men Will Be Men என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..